வாட் வரி உயர்வால் மருந்துப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் பொதுமக்கள் கடும் பாதிப்பு!

தமிழக அரசு உயர்த்தியுள்ள வாட் வரிவிதிப்பால் அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் வாட் வரிவிதிப்பை அதிகரித்து உத்தரவிட்டது. பொதுமக்களின் உயிர் காக்கும் அத்தியாவசிய தேவையான மருந்துப்பொருட்களும் இந்த வாட் வரிவிதிப்பிலிருந்து தப்பவில்லை. மருந்துக்கடைகளில் �கன்ஸ்யூமர் குட்ஸ்� எனப்படும் நாப்கின், பேபி பவுடர், பேபி ஆயில், சோப் போன்ற அயிட்டங்களுக்கு முன்பு இருந்த 12.5 சதவீத வரிவிதிப்பு தற்போது 14.5 சதவீதமாகவும், மற்ற மருந்துப்பொருட்களான மாத்திரை, டானிக் மற்றும் மருத்துவ உபகரண வகைகளுக்கு முன்பு இருந்த 4 சதவீத வரிவிதிப்பு தற்போது 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பு கடந்த ஜூலை 12 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மருந்துப்பொருட்களின் விலை திடீர் உயர்வு கண்டுள்ளது. இதனால் மருந்துக்கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருந்துப்பொருட்களின் விலை கூடுதலாக நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. மருந்து வியாபாரம் செய்வோர் தங்களுக்கான லாப கமிஷனை இழந்தும், ஒருசில வியாபாரிகள் தங்கள் மீதான வரிச்சுமையை நேரடியாக நுகர்வோர் மீது திணித்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

மதுரை மாநகரில் மட்டும் மருந்து பொருட்கள் சப்ளை செய்ய 200க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் திருச்சியில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை தினமும் கோடி க்கணக்கில் மருந்துப்பொருட்களை சப்ளை செய்து வருகின்றனர். கூடுதல் வாட் வரிவிதிப்பினால் ஏற்கனவே அனைத்து பொருட்களும் விலைவாசி ஏற்றம் கண்டுள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்களை பாதிப்படைய வைத்துள்ளது.

மருந்துக்கடை உரிமையாளர்களின் பேட்டி:

ராஜாத்தி(கே.கே.நகர்):

வாட் வரிவிதிப்பை உயர்த்தியிருந்தாலும் மருந்துப்பொருட்களுக்கு மட்டும் அதில் வரிவிலக்கு அளித்திருக்க வேண்டும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள வாட் வரியை உடனடியாக அமல்படுத்தியுள்ளதால், எம்ஆர்பி ரேட்டை விட கூடுதலாக பொதுமக்களிடம் வாங்க முடியாமல் எங்களுக்குரிய கமிஷனை இழந்து வருகிறோம்.

செல்வம்(அண்ணாநகர்):

மொத்த வியாபார கம்பெனிகள் எங்களுக்கு என்ன வரிவிதித்து மருந்துப்பொருட்களை சப்ளை செய்கிறார்களோ, அந்தவரியை மருந்து வாங்கும் நுகர்வோரிடம் தான் வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாட் வரி உயர்வினால் நேரடி மற்றும் மறைமுக பாதிப்பு பொதுமக்களுக்குத்தான்.

பெரியகருப்பன்(தல்லாகுளம்):

மருந்துப்பொருட்களுக்கு 2 வகையில் வாட் வரியை நிர்ணயம் செய்கின்றனர். ஏற்கனவே கம்பெனிகள் அந்தப்பொருட்களை பழைய வரியில் வாங்கி வைத்து எங்களுக்கு புதிய வரியில் விற்கின்றனர். ஒவ்வொரு மருந்துக்கும் Buy Viagra Online No Prescription கிடைக்கும் கமிஷனில் இருந்து வரியை கழித்துக்கொள்ளக்கூறுகின்றனர். இதனால் எந்த மருந்துக்கு அதிக கமிஷன் கிடைக்கிற தோ அதைத் தான் விற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

பிரபாகரன்(வண்டியூர்):

ஒவ்வொரு மருந்துக்கம்பெனியும் விதம்விதமாக டிஸ்கவுண்ட் ஆபர்களை அறிவிக்கின்றன. இதனால் சில்லரை மருந்து வியாபாரிகள் தங்களுக்கு கிடைக் கும் 20 சதவீத கமி ஷனில் தொழில் போட்டி காரணமாக வாடிக் கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கின்றன. பெரும்பாலான கடைகளில் முறையாக பில் தரப்படுவதில்லை. தற்போது வாட் வரியும் கூடுதலாக நிர்ணயிக்கப்படுவதால், அனைத்து வரிச்சுமையும் பொதுமக்கள் தலையில் தான் விழும், என்றனர்

Add Comment