தவறுக்கு மேல் தவறு செய்யும் தமிழக அரசு. ம .தி.மு.க.வைகோ பேச்சு…

தவறுக்கு மேல் தவறு செய்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில்தள்ளிவிடாமல்,உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்…
இது தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திருத்த சட்டத்தை ரத்து செய்து, சமச்சீர் கல்வி முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வரவேற்கத்தக்க Buy cheap Viagra சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழக அரசின் வீண் பிடிவாதத்தால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்க வேண்டிய தேதியில் திறக்கப்படாமல் பதினைந்து நாட்கள் தள்ளிப்போனது. பின்னர் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் பள்ளி மாணவர்கள் எந்தப் பாடங்களைப் படிப்பது என்ற தவிப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு சூழல் கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டதில்லை. எனவேதான், உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் பாடங்களை தொடங்க வேண்டும் என்றும் குறைபாடுகளை களைந்து புதிய பாடங்களை கூடுதல் புத்தகங்களாக அச்சிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால், இதனை ஏற்காமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான் என்று ம.தி.மு.க. மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் நகர ம.தி.மு.க. மாணவரணி சார்பில் கட்சியின் 18 ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சுப்பராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது

ஜனநாயக நாட்டில் தேர்தலை சந்திக்காமல் புறக்கணித்து விட்டு இன்னும் நிலைத்து நிற்கும் கட்சி ம.தி.மு.க. மட்டும் தான். 2016 சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு. அப்போது பலர் கணக்கை முடிப்போம். தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக வைகோ வந்து விடக்கூடாது என்பதற்காக எங்களை ஓரம் கட்டினார் ஜெயலலிதா. ஜனநாயக நாட்டில் எதிர்கட்சி தலைவருக்கு தான் மரியாதை.

சமச்சீர் கல்வி திட்ட செயல்பாட்டில் உள்ள குளறுபடியால் ஒன்றரை மாத காலமாக பள்ளியில் பாடம் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். உலக நாட்டில் இதுபோன்ற கொடுமை நடந்ததில்லை. கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான். இதையே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சமச்சீர் கல்வியின் செயல்பாட்டில் ஜெயலலிதா செய்த தவறுக்கு அவர் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா. இவ்வாறு அவர் பேசினார்.

Add Comment