அதிமுகவுக்கு மிரட்டல்: திமுக பிரமுகர் கைது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலக போனில், கடந்த 17-ந்தேதியன்று மாலை 3 மணி முதல் 3.30 மணிக்குள் 2 தடவை பேசிய மர்ம மனிதன், `அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் குண்டு வெடிக்கும்’ என்று கூறி மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்து விட்டான். இது குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கட்சி அலுவலக போனில் Bactrim No Prescription பொருத்தப்பட்டிருந்த காலர் ஐ.டி. கருவி மூலம் திண்டுக்கல் பகுதியில் இருந்து செல்போனில் அழைப்பு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மிரட்டல் விடுத்த பிறகு அந்த செல்போனும், சிம்கார்டும் செயல்படவில்லை.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

மிரட்டல் விடுத்த செல்போனில் இருந்து கடந்த மாதம் 6-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரியகரட்டுப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த துரைராஜ் (வயது 26) என்பவரது செல்போனுக்கு பேசி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் தனது கூட்டாளிகளான திண்டுக்கல் நேதாஜிநகர் கார்த்திக்ராஜா (36), பட்டிவீரன்பட்டி எம்.வாடிபட்டி காலனி தெரு ஜெயகணேசன் (32), திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் இ.வி.ஆர்.சாலை பாலாஜி (33) ஆகியோர் சேர்ந்து கட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை துரைராஜ் ஒப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும், தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களில் ஜெயகணேசன், சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதான கார்த்திக் ராஜா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், திண்டுக்கல் நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே நான் செல்போன் கடை நடத்தி வருகிறேன். இந்த பகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இதனால் எனது வியாபாரம் பாதிக்கப்பட்டதால், நண்பர்களின் ஆலோசனைப்படி போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

கைதான 4 பேரும், சென்னை ராயப்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

Add Comment