குற்றாலத்தில் சீரழிந்து வரும் சிறுவர் பூங்கா : பாராமரிக்க கோரிக்கை

குற்றாலம் சிறுவர் Buy cheap Levitra பூங்கா சீரழிந்து, சிலைகள் சிதிலடைந்துள்ளதை பராமரிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றாலம் அருவிகளும், ஆன்மிக ஸ்தலங்களும் உலக புகழ் பெற்றது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இவ்வேளையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழும். தென்றலுடன் கூடிய சாரல் மழை அவ்வப்போது பெய்துவரும்.

 

இந்நேரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை மூலம் குற்றாலத்தில் நீச்சல்குளம், பாம்பு, முதலை பண்ணை, படகு குளம், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூங்காவில் வரலாற்று சிறப்பு மிக்க தமிழன்னை, சேரன், சோழன், பாண்டியன், திருவள்ளுவர், அகஸ்தியர், தொல்காப்பியர், ஒளவையார், கம்பர், இளங்கோவடிகள் ஆகியோரின் சிலைகள் நீர் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சிறுவர்களுக்கென சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டு பல சிலைகளும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அமர்ந்து ரசிக்க இருக்கை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. குற்றாலத்திற்கு மத்திய அரசு சுற்றுலாத்துறை மூலம் வளர்ச்சி பணிக்கு 5 கோடி ரூபாய் வழங்கியது. அந்த 5 கோடி ரூபாய்க்கு பெயரளவு மட்டுமே வேலைகள் நடந்துள்ளது.

 

சிறுவர் பூங்கா உட்பட முக்கியமான இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர். குற்றாலம் சீசனை முன்னிட்டு ஆண்டு தோறும் பராமரிப்பு பணிகள் செய்து வருவது வாடிக்கை. ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. எனவே சுற்றுலா பயணிகள் நலன் கருதி சீரழிந்து வரும் சிறுவர் பூங்காவை பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Add Comment