3 ஆண்டு சட்டப் படிப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

சென்னை, ஜூன் 14: தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 ஆண்டு பி.எல். ஹானர்ஸ் படிப்பு ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16-ம் தேதி முதல் அந்தந்தக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி,  செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் 1,262 இடங்கள் உள்ளன.

இவற்றிலும், பல்கலைக்கழகத்தில் உள்ள 3 ஆண்டு பி.எல். ஹானர்ஸ் படிப்புக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16-ம் தேதி முதல் அந்தந்த சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படவுள்ளன.

விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், அவற்றைப் பூர்த்திச் செய்து அளிப்பதற்கும் ஜூலை 20-ம் தேதி Buy Lasix கடைசி நாள்.

Add Comment