நரை (பீ. எம். கமால், கடையநல்லூர்)

நரை

முதுமை தரிக்கும்
மாறுவேடத்தில்
நரைதான் Buy Levitra Online No Prescription அரிதாரமா ?

பொய்யின் நிறம்
கருப்பென்றால்
வெள்ளைஎன்பது
மெய்யா ?
அதனால்தான் முதுமையில்
வெள்ளை வெளிப்படுகிறதோ ?
நரை-
காலன் எழுதும்
காதல் கடிதமா ?
சவக்கோடிக்கு
முன்னோடியா ?
காலம் செய்யும்
கலப்படமா ?
நரை-
காலப் பறவை
இட்ட
எச்சமா ?
உயிர் குடியிருக்கும்
வாடகை வீட்டில்
விதி
வெள்ளை அடிக்கிறதோ ?
நரை-
மறுமை வாழ்க்கையின்
விடிவெள்ளியா ?
நரை-
மூடி மறைக்க
முடியாத வெளிச்சம் !
மரணக் கப்பலுக்கு
நரைஎன்ன
கலங்கரை விளக்கா ?
நரை-
போராட்டம் போதுமினி
எந்தப்
பொல்லாப்பும் வேண்டாமென
முதுமை காட்டும்
வெள்ளைக் கொடியா ?
நரை-
இளமைக் கணவன்
இறந்து போனதால்
முதுமை தரிக்கும்
வெள்ளைப் புடவையா ?
நரை-
உயிர்
உருகி வடிகிறதோ ?
முதுமை எழுதும்
முகவரிச் சீட்டோ ?
நரை-
அழகின் இசையா ?
அல்லது வசையா ?
தாவரங்கள் தரைக்கழகு !
தலைக்கு நரையழகு !
நரை-
கறுப்புத் தாளில்
வெள்ளை எழுத்து !
காலன் எழுதும்
தலை எழுத்து !
நரை –
அறிவரசன் ஏறுகின்ற
அரியாசனமா ?
ரோம நாட்டில்
வாக்கிழந்துபோன
அறியா சனமா ?

கருங்கடலில் வெள்ளிக்
கப்பல்களின் பயணம் –
தொடர்கிறது இன்னொரு
தொடரை நோக்கி !

நரை-
தலைக்கோழி போடுகின்ற
முட்டையா ? அல்லது
மரணம் போடுகின்ற சட்டையா ?

தன்னிலை அறியாமல்
தப்பாட்டம் போடுகின்ற
மனிதனின் தலையில்
நீக்ரோ பெண்ணொருத்தி
நின்று சிரிக்கிறாளோ ?

Add Comment