கடையநல்லூர் அருகே சாலை மறியல்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் முறையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கடையநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் (படம்) ஈடுபட்டனர்.

கடையநல்லூர் ஒன்றியம், நயினாரகரம் பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் குளம் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லையாம். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லையாம். இதையடுத்து, இப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் நயினாரகரம் ஊராட்சி மன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், குற்றாலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றால சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் நடைபெற்ற இம் மறியலால் ஏராளமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த தென்காசி வட்டாட்சியர் online pharmacy without prescription பரமசிவன் சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது

Add Comment