டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அப்போது தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த நடராஜ் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதையடுத்து புதிய டிஜிபியை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் லத்திகாவையே டிஜிபியாக திமுகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடர்ந்தார் நடராஜ். இந்த நிலையில் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். நடராஜ் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தது.இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து லத்திகா சரண் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
8.1.10 அன்று நான் தமிழக டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டேன். இதை தீயணைப்புத் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர்.நடராஜ் (ஓய்வு) எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தீர்ப்பாயம் 8.3.10 அன்று தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆர்.நடராஜ் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் (யு.பி.எஸ்.சி.), தமிழக அரசும் நடவடிக்கை எடுத்ததன் பேரில் நான் மீண்டும் டி.ஜி.பி.யாக தேர்வு செய்யப்பட்டேன். இதற்கான உத்தரவை 27.11.10 அன்று அரசு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆர்.நடராஜ் மனு தாக்கல் செய்தார். அதன்மீது 31.5.11 அன்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், என்னை டி.ஜி.பி.யாக மீண்டும் நியமனம் செய்து 27.11.10 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தேதியில் இருந்து ஆர்.நடராஜை டி.ஜி.பி.யாக நியமிக்க பரிசீலிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது Levitra No Prescription தவறான தீர்ப்பு. எனது நியமனத்தை ரத்து செய்வதற்கு வேறு சரியான காரணங்களை தீர்ப்பாயம் கூறவில்லை. எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் லத்திகா.

இதை விசாரித்த எலிபே தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து 31.5.11 அன்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஜுன் 8-ந் தேதி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக உள்துறைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பணி அனுபவம், பணிக்காலம் ஆகியவற்றை எல்லாம் ஆராய்ந்துதான் டி.ஜி.பி. பதவிக்கு லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி.ஜி.பி. நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு முழுமையாக பின்பற்றியுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைத்த அதிகாரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேரில் யாராவது ஒருவரை டி.ஜி.பியாக தேர்வு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தகுந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற டிஜிபி நடராஜ் அதிமுகவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவது உண்டு. இந்த நிலையில் லத்திகா சரணுக்கு ஆதரவாக தமிழக அரசு கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Comment