லிபியாவில் கடாபி தங்கியிருக்க பிரான்ஸ் ஆலோசனை : போராட்டக்குழு தலைவர்களுடனும் சர்கோசி பேச்சு.

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கர்னல் கடாபி பதவி விலக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 5 மாதமாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடாபி லிபியாவில் தங்க விரும்பினால் அவர் தனது பதவியை கைவிட வேண்டும். பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் லிபியாவில் இருக்க தடை இருக்காது என பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.
கடாபி நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் நிலையில் தான் நாட்டைவிட்டோ அல்லது பதவியைவிட்டோ வெளியேற முடியாது என கூறி வருகிறார். இந்த நிலையில் நேற்று பாரிசில் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி லிபியா போராட்டக்குழுவின் 3 தலைவர்களுடன் பேசினார்.

இந்த சந்திப்பின் போது மிஸ்ரட்டா பகுதியை சேர்ந்த அந்த தலைவர்கள் பிரான்ஸ் தங்களுக்கு உரிய ஆயுத உதவி மற்றும் நிவாரண உதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூபே கூறுகையில்,”லிபியா போராட்டக்காரர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறோம். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்வது என்பது குறித்து பார்ப்போம்” என்றார்.

லிபியாவின் கிழக்கு பகுதி போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிஸ்ரட்டா போராட்டகுழு தலைவர்கள் ரமதான் ஜமோ மற்றும் அகமது ஹாசிம் ஆகியோர் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியை சந்தித்தார்கள்.

buy Levitra online

Add Comment