வாட் வரி உயர்வினால் தமிழகத்தில் செல்போன் விற்பனை குறையும்: வியாபாரிகள் கருத்

செல்போன்களுக்கு வாட் வரி 10 சதவீதம் அதிகரித்து இருப்பதால் தமிழ்நாட்டில் இதன் விற்பனை கடுமையாக பாதிக்கும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செல்போன்களுக்கு முன்பு 4.5 சதவிகிதம் வாட் வரி வசூலிக்கப்பட்டது. சமீபத்தில் வாட் வரி 14.5 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. செல்போன்களுக்கான அடிப்படை வாட் வரியில் 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த வரி உயர்வுக்கு செல்போன் வர்த்த கர்கள் கவலையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
வாட் வரி உயர்வினால் தமிழ்நாட்டில் செல்போன் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, இந்திய செல்லுலார் சங்க தலைவர் பங்கஜ் மகிந்த்ரூ கூறியதாவது:-
செல்போன்களுக்கான வாட் வரி தமிழகத்தில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செல்போன் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். வாட் வரி உயர்வால் செல்போன்களின் விலை அதிகரித்துள்ளது. உதாரண மாக, ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட செல்போன், இனி ரூ.34 ஆயிரத்து 350-க்கு உயர்ந்துள்ளது.
இதனால் நுகர்வோர் செல்போன் வாங்க வேறு வழிகளை நாடுவார். தற்போது 70 சதவிகிதம் பொருட்கள் சட்டப்பூர்வமான சந்தைகளாகவும், 30 சதவிகிதம் கள்ள சந்தைகளும் செயல்படுகின்றன. கள்ளச்சந்தையில் விற்கப்படும் பொருள்கள் முறையாக வரி ஒதுக்கப்படாதவை என்பதால், அங்கு பொருள்களின் விலைகள் குறைவாக இருக்கும். விலை குறைவாக இருக்கும் இடத்தில்தான் நுகர்வோர்கள் பொருள்களை வாங்க நினைப்பர்.
எனவே, இனி செல்போன்கள் விற்பனை கள்ளச்சந்தையில் அதிகரிக்கும் என்பதால், சட்டப்பூர்வ சந்தைகளும் கள்ளச்சந்தையாக மாறும் வாய்ப்பு உள்ளது.
அண்டை மாநிலங்களில் செல்போன்களுக்கு 4.5 சதவிகிதம் மட்டுமே வாட் வரி விதிக்கப்படுவதால், அங்கு செல்போன் விலை தமிழ்நாட்டை விட குறைவாக உள்ளது. இதனால், நுகர்வோர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து, நண்பர்கள், உறவினர்கள் மூலம் வாங்குவார்கள். இப்படி, நேரடி சந்தைகளில் விற்பனை பாதிக்கும் போது, வாட் வரி மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறையும்
இவ்வாறு அவர் கூறினார்.
வாட் வரி உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனையாளர்கள் சிலர், விற்பனை குறையாமல் இருக்க செல்போன்களை பழைய விலைக்கே விற்று வருகின்றனர்.
இதுபற்றி, டெக்பெர்ரி செல்போன் நிறுவன தலைவர் ஜான் ஏசுதாஸ் கூறுகையில், எங்களது நிறுவன Buy cheap Doxycycline செல்போன்களுக்கு முன்பு 4 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. இப்போது வாட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் செல்போன் விலையை உயர்த்த நாங்கள் விரும்பவில்லை. முந்தைய விலையிலேயே எங்கள் நிறுவன பொருள்கள் கிடைக்கும் என்றார்.

Add Comment