10 மருத்துவமனைகளை சீரமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் விஜய்

 

தமிழ்நாட்டில் 10 மருத்துவமனைகளை சீரமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் விஜய் கூறினார்.

 

Amoxil No Prescription align=”justify”>
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் விஜய் பேசியதாவது:

அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்துகள், மாத்திரைகள், வெறிநாய்க்கடி, பாம்புகடி ஆகியவற்றுக்கு மருந்துகள் இருப்பு வைத்து இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 10 அரசு மருத்துவமனைகளை சீரமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனைக்கு நர்சுகளை வேலூர் அடுக்கம்பாறை அரசு கல்லூரியில் இருந்து மாற்றி, பென்ட்லேன்ட் மருத்துவமனையில் தங்கும் விடுதிகள் அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் விஜய் பேசினார்.

Add Comment