சுவிட்சர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ஸ்பெயின்

நடப்பு உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் முதல் அதிர்ச்சியாக கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள, Bactrim online உலகின் நம்பர் டூ அணியான ஸ்பெயின், சுவிட்சர்லாந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றுள்ளது.

வட கொரியாவிடம் பிரேசில் தடுமாறியதை விட சுவிட்சர்லாந்திடம் ஸ்பெயின் தோல்வியைத் தழுவியிருப்பது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு இது மிகப் பெரிய வெற்றி [^]யாகும். அந்த அணியின் ஜெல்சன் பெர்னாண்டஸ் அடித்த அபாரமான கோலால், ஸ்பெயின் ரசிகர்கள் [^] இதயங்கள் நொறுங்கிப் போயுள்ளன.

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையை பிரேசில் அல்லது ஸ்பெயின் வெல்லும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ள நிலையில் ஸ்பெயின் வீரர்களின் இந்தத் தோல்வி பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே சாதாரண வட கொரியாவிடம் கடுமையாகப் போராடி வெற்றி பெற்று பிரேசில், தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் ஸ்பெயினோ, தோல்வியைத் தழுவி பேரதர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

டர்பனில் நேற்று நடந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தாலும் கடைசி நேரத்தில் சுவிட்சர்லாந்து தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்து விட்டது.

இதுவரை இரு அணிகளும் 18 முறை மோதியிருந்தன. 19வது முறையாக நேற்று மோதின. கடந்த 18 போட்டிகளிலும் ஒருமுறை கூட சுவிட்சர்லாந்து வென்றதில்லை. ஆனால் இதற்கெல்லாம் மொத்தமாக சேர்த்து வைத்து நேற்று ஸ்பெயினைப் புரட்டிப் போட்டு விட்டது சுவிட்சர்லாந்து.

ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஸ்பெயின் வசமே பந்து முழுமையாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து விடா முயற்சியுடன் ஆடி வந்தது சுவிஸ்.

ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. கோலை நோக்கி வந்த பந்தை ஸ்பெயின் வீரர் கசில்லாஸ் தடுத்து நிறுத்தினார். ஆனால் பந்து அவரிடமிருந்து எகிறி ஓடியது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சுவிஸ் அணியின் பெர்னாண்டஸ் அபாரமாக கோலுக்குள் தள்ளி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

இதில் என்ன விசேஷம் என்றால், சுவிஸ் அணிக்கு கோலடிக்க கிடைத்த 2வது வாய்ப்பு இது. முதல் வாய்ப்பை தவற விட்ட சுவிஸ், தனது 2வது வாய்ப்பை வெற்றிகரமாக கோலாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் அணி கோலடித்ததும் மைதானத்தில் திரண்டிருந்த ஸ்பெயின் ரசிகர்கள் மனம் உடைந்து அமைதியாக இருந்தனர்.

கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் தோற்றதும், தொடர்ந்து ஸ்பெயினிடம் தோல்வியைத் தழுவி வந்த சுவிட்சர்லாந்து அதை அழகாக பழிவாங்கிய விதமும்தான் நேற்றைய உலகக்கோப்பைக் கால்பந்தின் சிறப்பம்சமாகும்.

Add Comment