தமிழகத்தில் 30ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 30ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களில் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டால் தேர்வு மையத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வி.ஏ.ஓ தேர்வு தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் வரும் 30ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வசதியாக அனைத்து பகுதிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
* ஹால் டிக்கெட்டை தேர்வு மையங்களுக்கு தவறாமல் எடுத்து செல்ல வேண்டும். நீலம் அல்லது கருமை நிறம் கொண்ட பால் பாயின்ட் பேனாவை மட்டும் தேர்வுக்கு பயன்படுத்த வேண்டும்.
* பதிவு எண், வினாத்தாள் வரிசை எண் ஆகியவை தவறாக நிரப்பபட்டிருந்தாலோ அல்லது நிரப்பபடாமல் விடப்பட்டிருந்தாலோ தலா ஒரு மார்க் குறைக்கப்படும்.
* வினாத்தாள் வரிசைக்கான கட்டம் நிரப்பபடாமல் விடப்பட்டிருந்து அதனை விடைத்தாளின் நேரடி ஆய்வினாலும் அடையாளம் காண இயலாத விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
* விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அல்லது அவருடைய ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள விருப்ப பாடங்களின்றி மற்ற பாடங்களில் விடையளிக்கப்படும் விடைத்தாட்கள் செல்லாததாக்கப்படும்.
* விண்ணப்பதாரர் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு சரியாக 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு கூடத்தில் தங்கள் இருக்கையில் அமர வேண்டும்.
* தேர்வு தொடங்கி 30 நிமிடங்கள் கழித்து வரும் விண்ணப்பதாரர் எவரும் தேர்வு மையத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவை கடந்து விடையளிக்க விண்ணப்பதாரர் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்.
* ஏதேனும் தொற்று நோயினால் அவதிப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு கூடத்திற்குள் புகை பிடிக்க அனுமதி இல்லை. தேர்வு கூடத்தில் அமைதியும், ஒழுங்கும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
* புத்தகம், குறிப்பேடுகள், அகராதி, அளவுகோல் அல்லது வரைவதற்கான உபகரணங்கள், கால்குலேட்டர், செல்போன், பேஜர், துண்டு காகிதங்கள், பைகள் அல்லது கைப்பெட்டிகள் ஆகிய எவற்றையும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தேர்வு கூடத்தினுள் கொண்டு செல்ல கூடாது.
* விடைத்தாளை தூசியில் இருந்தும் சிதைவதில் இருந்தும் பாதுகாத்துகொள்ள Levitra online வேண்டும். வினாத்தாள் வரிசை அதற்கான கட்டத்தில் நிரப்பபடவில்லை என்றாலோ அல்லது தவறாக நிரப்பபட்டிருந்தாலோ ஒரு மார்க் குறைக்கப்படும். விடைத்தாள்கள் விடை மதிப்பீட்டு கருவிகளால் மதிப்பீடு செய்யப்படுவதால் அவற்றை அழிப்பான்கள், பிளேடுகள் போன்றவற்றை உபயோகித்து சேதப்படுத்த கூடாது.
* குறிப்பேடுகளை கொண்டு வருதல் மற்றும் அதனை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கின்மை மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுதல் கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது. இதனை மீறுபவர்கள் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவதுடன் நடக்கின்ற அல்லது விரைவில் நடக்கும் தேர்வுகளுக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.
* விடைத்தாளில் விடைகளை நிரப்பி காட்ட பென்சிலை பயன்படுத்த கூடாது. பென்சில் கொண்டு ஏதாவது விடைகள் நிரப்பபட்டிருந்தால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
* விடைத்தாள் விடைகளை தவிர எந்தவித குறிப்புகளை எழுதவோ, குறியீடுகளை செய்யவோ அனுமதியில்லை. எழுதி பார்த்து கொள்ள விரும்பும் எதையும் விடைத்தாளில் எழுத கூடாது.
* அனைத்து விடைகளும் விடைத்தாளில் மட்டுமே குறிக்கப்பட வேண்டும். அதுவும் சம்பந்தப்பட்ட கட்டங்களில்தான் குறிப்பிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு எந்த விடை சரியானதாக இருப்பதாக கருதுகிறீர்களோ அந்த விடைக்குரிய கட்டத்தை முழுவதுமாக நிரப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டம் நிரப்ப கூடாது. இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள

Add Comment