அம்மா..! (அர்த்தமுள்ள ஒரு வரி கவிதை)

அம்மா..! (அர்த்தமுள்ள ஒரு வரி கவிதை)

என்

தமிழ் கொண்ட

அர்த்தமுள்ள ஒரு வரி கவிதை..!

ஈசனும்

ஈரேழு பிறவி வேண்டுமென்பான்

ஈன்றது என் தாயாய் இருந்தால்..!

ஒவ்வொரு இரவும் ஆராரோ

ஓயாமல் ஒலிக்கிறது….

தாயவள் தாலாட்டியது..!

தேசம் தொலைத்து…

ஆயிரம் நாட்கள் அந்திசாய்ந்து விட்டது

அரபிகடலோடு..!

இன்றும் தூங்காமல் ஏங்குகிறேன்

அன்னை மடிக்காக..!

காதலும் கலங்கமானது இன்று

அன்னையின் அன்பை தவிர..!

வெற்றியின் தொடர்புள்ளி

தாயே நீ மட்டும்தான்..!

நிலவையும் நித்திரையின்றி

ஏங்க வைக்கும் ; நிலாச்சோறு

விரல் பிடித்து நடந்த வீதியிலே

மண் தரை மாறியேபோனது

கல் மணல் கலவை கொண்டு

கான்கிரீட்டாக…!

வெற்றிக்கு வழிகாட்டும்

விரல் பிடித்து நடக்க

மறந்ததில்லை இப்போதும்…!

எப்போதும்..!

பக்கத்து தெருவரை

பதம் பார்த்திருக்கிறது

அடுப்பில் இட்ட மிளகாய் வத்தல்

சுற்றிப்போட்டது…! எனக்கு..!

அன்னையளித்த ஆதி மொழி

அன்பதனை அடுக்கடுக்காக

தொடுக்க கற்றுக்கொள்

எதிர்நோக்காமல் எள்ளளவும்..!

ஹிட்லரும்

அன்னை மடிக்காக ஏங்கியவன் தான்..!

அன்பிற்காக..!

தலைப்பாகையாக

உயிரென தமிழ் கொண்ட

Buy cheap Levitra #0000ff;”>ஒரு வரி கவிதை

“அம்மா”

என்றென்றும் அன்புடன்
செல்வன் மா.மணிகண்டன்
ஆய்க்குடி.

Add Comment