ஐ.ஏ.எஸ்.என்பது அக்னி வேள்வி அல்ல! – திவ்யதர்ஷினி

”ஐ.ஏ.எஸ். பாஸ் பண்றதுக்குத் தேவையான தகுதிகள் என்ன..?’’ என்று ‘இந்திய முதல்வர் திவ்யதர்ஷினி’யிடம், (கடந்த இதழ் கவர் ஸ்டோரி) பியூட்டி பார்லரில் வைத்து சென்னை, விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் பொண்ணு ரிமோனா கேட்டபோது,

”ஐ.ஏ.எஸ். ஆகும் தகுதி எனக்கு மட்டுமில்ல, எங்க அக்கா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ், என்னோடு பாங்க்ல வேலை பார்த்தவங்கனு பல பெண்களுக்கும் இருக்கு. சொல்லப்போனா, தேசிய அளவுல இந்த எக்ஸாம்ல முதலாவது வந்திருக்கிற என்னைவிட, இவங்கள்ல பலருக்கு அதிக தகுதிகள் இருக்கு. ஆனா, அவங்கெல்லாம் அதுக்கு முயற்சி செய்யல; நான் முயற்சி செய்தேன். அதுதான் வித்தியாசம்!” – அத்தனைப் பக்குவமாக பதில் தந்தார் திவ்யதர்ஷினி!

”நாம ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சிருப்போம். பிரிலிம்ஸ், மெயின் எக்ஸாமை பெரும்முயற்சியால தாண்டி வந்திருப்போம். ஆனா, சுமார் அரைமணி நேரமே நடக்கற நேர்முகத் தேர்வுதான் நாம ஐ.ஏ.எஸ்-ஸா, ஐ.பி.எஸ்-ஸா, ஐ.ஃஎப்.எஸ்-ஸா… இல்லை எதுவுமே இல்லாம வெளியேறப் போறோமானு முடிவு செய்யும்” என்ற திவ்யா, தன் நேர்முகத் தேர்வு நிமிடங்களை பகிர்ந்து கொண்டார்…

”டெல்லியில, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினரான ரஜினி ரஸ்தன் தலைமையில ஒரு குழு தயாரா இருந்தாங்க. எதிர்பாராதவிதமா முதல் ஆளா உள்ளே கூப்பிட்டதால, பதற்றமா இருந்தது. அதைப் புரிஞ்சுக்கிட்டு, சகஜ நிலைக்கு கொண்டு வர்றதுக்காக ‘உன் பேருக்கு என்ன அர்த்தம்? இப்பதான் முதல் முதலா டெல்லிக்கு வந்திருக்கியா? டெல்லியில என்னவெல்லாம் பார்த்தே?’னு கேஷ§வலா பேச்சை தொடங்கினாங்க ரஜினி. டெல்லியில குதுப்மினாரை பார்த்ததா நான் சொல்ல, ‘இவ்வளவு உயரமான கட்டடத்தை எப்படி கட்டியிருப்பாங்கனு தெரியுமா?’னு மெள்ள சப்ஜெக்ட்டுக்கு வந்தாங்க. ‘எனக்கு தெரியாது’னு சொன்னேன். ‘பரவாயில்லை. யூகம் பண்ணித்தான் சொல்லேன்’னாங்க. நான் யூகமா சொன்ன பதிலும் நிஜமான பதிலும் நெருக்கமாவே இருந்ததுனு, அவங்க கொடுத்த விளக்கத்தை வெச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்றவர்,

”தொடர்ந்து, நான் சட்டத்துறை மாணவிங்கறதால அவசரச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்னு சட்டங்கள் பத்தின கேள்விகள், கருத்துகளாவே கேட்டாங்க. ஒரு கட்டத்துல அது ஒரு விவாதமாவும் தொடர்ந்தது. ஒரு சிச்சுவேஷன் கொடுத்து ‘இப்போ நீங்க என்ன செய்வீங்க?’னு கேட்கறது, இன்டர்வியூவுல ஒரு முக்கிய தருணமா இருக்கும். எனக்கு அவங்க கொடுத்த சிச்சுவேஷன் கொஞ்சம் வினோதமாவே இருந்தது.

‘உன் கணவரும் உன்னைப் போலவே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. திருமணம் ஆன சில வருடங்கள் கழித்து அவர் லஞ்சம் வாங்குவது உனக்கு தெரிய வருகிறது. அப்போது என்ன செய்வாய்?’

‘இப்படிப்பட்டவர் எனக்கு கணவராக வருவதற்கு சான்ஸே இல்லை…’

‘திருமணத்துக்கு பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் லஞ்சம் வாங்கும் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார் என்று வைத்துக் கொண்டு கேள்விக்கு பதில் சொல்.’

‘பொறுமையாக பேசி… அவரை திருத்துவதற்கு முயற்சிப்பேன். திருந்தவில்லை என்றால் ஊழல் தடுப்புத்துறை போலீஸாரிடம் முறையிட்டு கைது செய்ய வைத்து விடுவேன்.’

‘உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு பதில் சொல். நீ இப்படி செய்வதால் உன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று யோசிக்க மாட்டாயா?’

‘லஞ்சம் வாங்கும் ஒரு ஊழல் அதிகாரிக்கு பிள்ளைகளாக இருப்பதைவிட, சமூக விரோதியாக மாறும் கணவனை திருத்துவதற்கும் தண்டிப்பதற்கும் தயங்காத ஒரு நேர்மையான பெண்ணின் பிள்ளைகளாக அவர்கள் வளர்வதுதான் நல்லது என்று முடிவெடுப்பேன்!’ – சரிதானே..?!” என்று திவ்யா சிரிக்க, ”யெஸ்” என்று அத்தனை பெண்களும் ‘ஓ’ போட்டனர்!

சென்னை, அரும்பாக்கத்தில் இருக்கிறது ‘பிரபாஸ் ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமி’. இதுதான், திவ்யா இந்த தேர்வுக்கு பயிற்சி எடுத்த களம். அங்கே திவ்யாவோடு சென்றோம். அவருடன் இந்தத் தேர்வை எழுதி, அகில இந்திய அளவில் 22-வது ராங்க் வாங்கி இருக்கும் விஜய கார்த்திகேயன், பயிற்சியாளர்கள் ஷ்யாம்சுந்தர், அபிராமி, சங்கீதா மற்றும் அகாடமியின் தலைவர் பிரபாகரன் ஆகியோரும் சேர்ந்து கொள்ள, அங்கே கலகலப்பாக கரைந்தன நிமிடங்கள்.

நிறைவாக, ”ஐ.ஏ.எஸ். என்பது அக்னி வேள்வி அல்ல. தீர்க்கமான லட்சியமும் சமரசங்கள் இல்லாத முயற்சியும் இருந்தால், உங்கள் வீட்டிலும் மாட்டலாம் ஐ.ஏ.எஸ். நேம் போர்டு!”

– சினேகமாக திவ்யா அழைக்க, மற்றவர்களும் முழுமனதோடு ஆமோதித்தனர்.

சிவில் சர்வீஸ் எக்ஸாம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்தார் அகாடமியின் தலைவர் பிரபாகரன்.

”சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு நிறைய செலவாகும் என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கான பெரிய செலவு, buy Levitra online நேரம் மட்டும்தான். இளநிலை அல்லது முதுநிலை படிப்புக்குப் பிறகு முழு மூச்சாக ஓராண்டை ஒதுக்கி இதற்கு படித்தால், வெற்றி நிச்சயம். கோச்சிங் சென்டர்களில் லட்சங்களில் செலவழித்து படித்தால்தான் பாஸ் செய்ய முடியும் என்பது தவறு. டெல்லியில் இருப்பதைவிட பல வகைகளிலும் சிறந்த பயிற்சி நிலையங்கள் இப்போது சென்னையிலேயே இருக்கின்றன. இந்த வருட தேர்வில் முதல் 30 இடங்களில் 8 இடங்களை தமிழ்நாட்டு மாணவர்கள்தான் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதே இதற்கு சாட்சி” என்றவர்,

”சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம் என்ற பேதம் இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஏதாவது இரண்டு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். தமிழ் இலக்கியம், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்… போன்ற சப்ஜெக்ட்டுகளை ஒருவர் தேர்ந்தெடுத்தால் பிரச்னைஇல்லை. தமிழிலேயே இந்தத் தேர்வை எழுதலாம். ஆனால், இன்ஜினியரிங் அல்லது மெடிசின் போன்ற சப்ஜெக்டுகளை தேர்வு செய்தால்… இவற்றுக்குத் தமிழில் போதுமான புத்தகங்கள் இல்லை. மேலும், இந்தத் துறைகளில் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற ஐ.ஐ.டி. மற்றும் எய்ம்ஸ் போன்ற வட இந்தியக் கல்லூரி பட்டதாரிகளிடம் போட்டி போடுவது சிரமமாக இருக்கும். அதனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்ஜினீயரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களாக இருந்தாலும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மற்ற பாடங்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வருடம் தேசிய அளவில் 22-வது இடத்தை பெற்றுள்ள விஜய கார்த்திகேயன், ஒரு டாக்டர். இருந்தாலும் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் ஆந்த்ரோபாலஜி ஆகிய சப்ஜெக்ட்ஸைத்தான் எடுத்துப் படித்தார்!” என்றார் பிரபாகரன்.

– அவள் விகடன்

Add Comment