கடையநல்லூர் பகுதியில் மழையின்றி பயிர்கள் கருகும் அபாயம்

கடையநல்லூர் : கடையநல்லூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கார் சாகுபடி பயிர்கள் போதுமான மழை இல்லாததால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏராளமான குளங்கள் வறண்டு கிடக்கின்றன.கடையநல்லூர், சொக்கம்பட்டி, தார்காடு, காசிதர்மம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கார்சாகுபடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீசன் மழையை நம்பி விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடி மேற்கொள்ள தயாராயினர். இதற்கான ஆயத்த பணிகள் துவங்கிய நிலையில் எப்படியும் சீசன் மழை கைகொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் ஏமாற்றத்தை தான் காணமுடிந்தது.நூற்றுக்கணக்கான ஏக்கர் கார் சாகுபடி பயிர்கள் போதுமான தண்ணீர் இல்லாத நிலையால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கிணற்று பாசனத்தின் மூலமாக பெறப்படும் கார் சாகுபடியும் போதுமான நீர்பிடிப்பு இல்லாததால் ஏராளமான கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் கடையநல்லூர் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் கார் சாகுபடி பயிர்கள் கருகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதனால் கார் சாகுபடி விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்

Lasix No Prescription

Add Comment