இளம்பெண்ணுடன் பாதிரியார் மாயம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு தீ வைப்பு : புளியங்குடி அருகே பரபரப்பு

புளியங்குடி : புளியங்குடி அருகே இளம்பெண்ணுடன் பாதிரியார் மாயமானதையடுத்து கிறிஸ்துவ ஆலயத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புளியங்குடி அருகேயுள்ளது நெற்கட்டும்செவல் கிராமம். இங்கு சுமார் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு என்ற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த மூன்று மாதங்களாக நாகர்கோவிலை சேர்ந்த மோகன்தாஸ் (29) என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். அவர் தேவாலயத்தின் அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த ஆலயத்தில் திருமணம், ஞானஸ்நானம் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மகள் பரிமளாகாந்தி buy Viagra online (22) தேவாலயத்திற்கு வருவது வழக்கம்.

 

இந்நிலையில் பாதிரியாருக்கும் பரிமளாகாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி இருவரும் திடீரென மாயமாயினர். இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இச்சூழ்நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதில் தேவாலயத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர்கள், திரை மற்றும் பொருட்கள் தீயில் எரிந்தன. இதுகுறித்து புளியங்குடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புளியங்குடி டி.எஸ்.பி. ஜமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பரிமளாகாந்தி தந்தை மதியழகனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தேவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Add Comment