சிலியிடம் வீழ்ந்தது ஹோன்டுராஸ்

உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில், சிலி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது ஹோன்டுராஸ் அணி.
தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், “எச்’ பிரிவில் இடம் பெற்ற சிலி, ஹோன்டுராஸ் அணிகள் மோதின.

சிலி ஆதிக்கம்: விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிலி அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முரட்டாட்டம் ஆடிய சிலி அணியின் கார்மானோ (4 வது நிமிடம்), பெர்னாண்டஸ் (19 வது நிமிடம்) “எல்லோ கார்டு’ பெற்றனர். முதல் பாதியில் கிடைத்த 4 “கார்னர் கிக்’ வாய்ப்புகளை, சிலி அணி வீணடித்தது. 34 வது நிமிடத்தில் இஸ்லோ கொடுத்த “பாசை’ பெற்றுக் கொண்ட பேஸ்ஜோர் ஒரு சூப்பர் கோல் அடிக்க, முதல் பாதியில் சிலி அணி முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்க, ஹோன்டுராஸ் அணி இரண்டாவது பாதியில் கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பலன் எதுவும் கிடைக்க வில்லை. தொடர்ந்து சிலி அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை, ஹோன்டுராஸ் கோல்கீப்பர் வல்லாடேர்ஸ் தடுத்தார். இறுதியில் இப்போட்டியில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சாதனை வெற்றி
உலககோப்பை கால்பந்து அரங்கில் 48 ஆண்டுகளுக்குப் பின் முதல் வெற்றியை Buy Cialis Online No Prescription பதிவு செய்தது சிலி அணி. இதற்கு முன் கடந்த 1962 ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகோப்பை தொடரின் போது, யுகோஸ்லோவியா அணியை வீழ்த்தியிருந்தது. அதற்குப் பின் 13 முறை உலககோப்பை தொடருக்கு வாய்ப்பு பெற்ற சிலி அணி, ஒரு போட்டியில் கூட வெற்றியை எட்ட வில்லை.

Add Comment