உருகுவே அபார வெற்றி * தென் ஆப்ரிக்கா பரிதாபம்

Buy Amoxil Online No Prescription justify;”>தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில், உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று பிரிடோரியாவில் நடந்த லீக் போட்டியில், “ஏ’ பிரிவில் இடம் பெற்ற தென் ஆப்ரிக்கா, உருகுவே அணிகள் மோதின.

உருகுவே முன்னிலை: இப்போட்டியின் 22 வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு “பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை கோலாக்க தவறினார் சோரஸ். ஆட்டத்தின் 24 வது நிமிடத்தில், 90 அடி தூரத்திலிருந்து “பீல்டு கோல்’ அடித்து அசத்தினார் உருகுவே வீரர் போர்லான். முதல் பாதியில் உருகுவே 1-0 என்ற முன்னிலை பெற்றது.

“ரெட் கார்டு’: இரண்டாவது பாதியில் கோல் அடிக்க கடுமையாக போராடிய தென் ஆப்ரிக்க அணியினர் முரட்டாட்டத்தில் ஈடுபட்டனர். உருகுவே நட்சத்திர வீரர் சோரசை குறிவைத்து தாக்கினர் தென் ஆப்ரிக்க வீரர்கள். ஆட்டத்தின் 76 வது நிமிடத்தில் கோல் அடிக்க முற்பட்ட சோரசை, தென் ஆப்ரிக்க கோல் கீப்பர் குனே காலால் தட்டினார். இதனால் இவர் “ரெட் கார்டு’ வழங்கப்பட்டு வெளியேறினார். இதன் மூலம் உருகுவே அணிக்கு “பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை கோலாக மாற்றினார் போர்லான். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெரைரா தலையால் முட்டி சூப்பர் கோலடிக்க, உருகுவேயிடம் 3-0 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா.

Add Comment