இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட ஹினா ரப்பானி கர் பிரார்த்தனை!

Bactrim No Prescription alt=”” width=”150″ height=”150″ align=”left” border=”0″ />பாகிஸ்தான் வெளியுறவு பெண் மந்திரி ஹினா ரப்பானி கர் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்படவேண்டும் என விரும்புகிறார். இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹினா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷிர், மற்றும் அதிகாரிகள் தெற்கு டெல்லியில் உள்ள சுபி சன்னியாசி நிஷாமுதீன் அவுலியா தர்காவில் பிரார்த்தனை நடத்தி உள்ளனர்.
பெண்களை தர்கா உள்ளே அனுமதிப்பது இல்லை. அதனால் அவர் வெளி சுற்று சுவரில் இருந்து பிரார்த்தனை செய்தார். அவருடன் வந்தவர்கள் உள்ளே சென்று பிரார்த்தனை செய்து உள்ளனர். அந்த தர்காவில் இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கு இடையே அமைதி நிலவ வேண்டியும், இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்படவும் ஹினா பிரார்த்தனை செய்ததாக அங்குள்ள மத குரு தெரிவித்தார்

Add Comment