காம்பிர் அதிரடி: இந்தியா வெற்றி * சுருண்டது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை, தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் காம்பிர் 82 ரன்கள் விளாச, வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று தம்புலாவில் நடந்த போட்டியில், இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொண்டது. “டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், பேட்டிங் தேர்வு செய்தார்.

அதிரடி துவக்கம்: வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. தமிம் இக்பால் 22 ரன்கள் (ஒரு சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். அஷ்ரபுல் (20) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய இம்ருல் (37) நம்பிக்கை அளித்தார். நிதானமாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் (30) ஆறுதல் அளித்தார்.

சேவக் துல்லியம்: கேப்டன் சாகிப் அல் ஹசன் (7), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். “மிடில்-ஆர்டரில்’ களமிறங்கிய மகமதுல்லா (23) ஏமாற்றினார். பின் 35வது ஓவரை வீசி சேவக் கலக்கினார். இதன் முதல் பந்தில் சுக்ரவாடி சுவோ (4) எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். 4வது பந்தில் ஷபிபுல் இஸ்லாம் (0), எல்.பி.டபிள்யு., முறையில் வெளியேறினார். அடுத்த பந்தில் online pharmacy no prescription சயீத் ரசால் (0) போல்டானார். இதனையடுத்து வங்கதேச அணி 34.5 ஓவரில் 167 ரன்களுக்கு “ஆல்-அவுட்’ ஆனது.
இந்தியா சார்பில் துல்லியமாக பந்துவீசிய சேவக் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

கலக்கல் காம்பிர்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக் (11), விராத் கோஹ்லி (11), ரோகித் சர்மா (0) உள்ளிட்ட “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். பின் அபாரமாக ஆடிய காம்பிர், ஒருநாள் அரங்கில் தனது 20வது அரைசதமடித்தார். இவர் 82 ரன்கள் எடுத்தபோது மோர்டசா வேகத்தில், எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். கேப்டன் தோனி (38*), சுரேஷ் ரெய்னா (1) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 30.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போனஸ் புள்ளி
நேற்று வங்கதேச அணி நிர்ணயித்த 168 ரன்களை, இந்திய அணி 30.4 ஒவரில் எட்டியதால், இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தில் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி உள்ளது.

Add Comment