நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி அரசு உடனே வழங்க கோரிக்கை

“நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் மாவட்டத்தலைவர் அப்துல் ரகுமான் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வரும் ஆகஸ்ட் மாதம் ரம்ஜான் பிறையில், முஸ்லீம்கள் உண்ணா நோன்பிருந்து, நோன்பு திறக்கும் நேரம், அரிசிக்கஞ்சி கொடுத்து நோன்பை Buy cheap Ampicillin முடிப்பது வழக்கம். நோன்பு கஞ்சிக்கு தமிழக அரசால் இலவச அரிசி வழங்கும் திட்டம் வெறும் அறிவிப்பாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி வாசல்கள் அரிசி பெற அதிகாரிகளை தொடர்புக் கொண்டால், இத்திட்டம் குறித்து அதிகாரபூர்வ உத்தரவு கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தட்டிக்கழிக்கின்றனர். அரசின் அறிவிப்பின் மூலம் 95 சதவீத பள்ளிவாசல்கள் பயனடைய முடியாத நிலை உள்ளது. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Add Comment