கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?

Buy Ampicillin src=”http://thatstamil.oneindia.in/img/2011/07/29-kalaingnartv-srividhya-shan.jpg” alt=”KalaingnarTV Srividhya Shankar” hspace=”0″ vspace=”5″ />
டெல்லி: கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன,” என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment