சிங்கப்பூர் முதல் காலாண்டில் 36,500 வேலைகள்

சிங்கப்பூர் முதலாளிகள் முதல் காலாண்டில் 36,500 வேலைகளைச் சேர்த்து, கிட்டத்தட்ட ஈராண்டு களில் ஆகக்குறைவான வேலையின்மை விகிதத்திற்குச் சிங்கப்பூரை இட்டுச் சென்றுள்ளனர்.
வேலையின்மை விகிதம் சென்ற டிசம்பர் மாதத்தின் 2.3 விழுக்காட்டிலிருந்து, இவ்வாண்டு மார்ச் மாதம் 2.2 விழுக்காட்டுக்குக் குறைந்ததாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக, இவ்வாண்டின் முதல் காலாண்டில் வேலைகளின் எண்ணிக்கை 36,500 அதிகரித்தது. சென்ற ஆண்டு கடைசி காலாண்டில் கிட்டிய 37,500 வேலைகளுக்கு இது நிகரானது.
உலகளாவிய பொருளியல் பின்னடைவால், சென்ற ஆண்டு முதல் காலாண்டில் வேலையில் இருப்போர் எண்ணிக்கை 6,200 குறைந்தது.
“தொழிலாளர் சந்தை 2010 முதல் காலாண்டில் வலுவடைந்தது. பொருளியல் பின்னடைவிலிருந்து கிட்டிய வலுவான மீட்சி இதற்கு முக்கிய காரணம்” என்று மனிதவள அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
புதிய வேலைகளில் பெரும்பகுதி அல்லது 33,400 வேலைகள் சேவைத் துறையைச் சேர்ந்தவை. இவ்வாண்டு தொடக்கத்தில் சிங்கப்பூரின் இரண்டு சூதாட்டக்கூட உல்லாசத்தளங்களின் திறப்பு இதற்கு முக்கிய காரணம்.
சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில், சேவைத் துறையில் no prescription online pharmacy உருவான 31,500 புதிய வேலைகளைவிட இது அதிகம்.
உற்பத்தித் துறையில் 3,100 வேலைகள் கூடின. சென்ற 2008 நான்காம் காலாண்டில் இருந்து 2009 மூன்றாம் காலாண்டு வரை உற்பத்தித் துறையில் ஊழியர் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதற்குப் பிறகு, தெ
„டர்ந்து இரண்டாவது காலாண்டாக, ஊழியர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
தொடர்ந்து 20 காலாண்டுகளாக ஊழியர் எண்ணிக்கை அதிகரித்து வந்த கட்டுமானத் துறை, இவ்வாண்டு முதல் காலாண்டில் 400 வேலைகளை இழந்தது.
புதிய வேலைகளின் உருவாக்கத்தால், மொத்த வேலையின்மை விகிதம் மார்ச் மாதம் 2.2 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
அதேபோல, இங்கு வாழும் மக்களிடையிலான வேலையின்மை விகிதம் டிசம்பர் மாதத்தின்
3.3 விழுக்காட்டிலிருந்து முதல் காலாண்டில்
3.2 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
மார்ச் மாதம் உத்தேசமாக 63,300 மக்கள் வேலையில்லாமல் இருந்தனர். நீண்டகால வேலையின்மை நிலவர மும் மேம்பட்டது. குறைந்தது 25 வாரங்களாக வேலை தேடுவோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டின்
16,600ல் இருந்து மார்ச் மாதம் 14,600க்குக் குறைந்தது.

நவ்பல்,சிங்கப்பூர்

Add Comment