கடையநல்லூரில் பரிதாபம்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; அதிர்ச்சியில் தந்தை சாவு

கடையநல்லூரில் பரிதாபம்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; அதிர்ச்சியில் தந்தை சாவு
கடையநல்லூர், Viagra No Prescription ஜூலை. 29-
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பால்சாமி (வயது 53). இவரது மகள் சுதாலட்சுமி(19).இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது. திருமண ஏற்பாடுகளை பால்சாமி செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று திடீரென சுதாலட்சுமி பெற்றோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் வீடு திரும்பிய பால்சாமி, அவரது மனைவி மகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சியில் பால்சாமி இறந்தார்.
தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தந்தை -மகள் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் பிடிக்காததால் சுதாலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காரணத்திற்காகத்தான் இறந்தாரா ?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை -மகள் இறந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment