குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் குற்றால சீசன் களைகட்ட துவங்கிவிடும். அதுபோல் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ததால் குற்றாலத்தில் சீசன் துவங்கி கடந்த ஒரு வாரமாக களைகட்டி வந்தது. கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை குறைவால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைந்து காணப்பட்டது.

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீர் சுமாராக விழுந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர். கூட்டம் பெண்கள் பகுதியில் குறைவாகவும், ஆண்கள் பகுதியில் அதிகமாகவும் காணப்பட்டது.

செண்பகாதேவி அருவி, தேனருவியிலும் தண்ணீர் குறைந்தது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும் விழுந்த தண்ணீர் நேற்று குறைந்து ஆண்கள் பகுதியில் ஒரு கிளையிலும், பெண்கள் பகுதியில் ஒரு கிளையிலும் மட்டுமே தண்ணீர் விழுந்தது. இங்கும் சுற்றுலா Doxycycline No Prescription பயணிகள் வரிசையில் நின்று குளித்து சென்றனர். சிற்றருவியில் குறைவாகவும், புலியருவியில் மிக குறைவாகவும் தண்ணீர் விழுந்தது.

பழையகுற்றாலத்தில் மிதமாக தண்ணீர் விழுந்தது. குற்றாலம் பகுதியில் நேற்று லேசாக வெயில் அடித்தது. அவ்வப்போது கருமேக கூட்டங்கள் ஒன்று திரண்டாலும் சாரல் மழையை தர தயங்கியது. மாலை நேரத்தில் இதமான தென்றல் காற்று வீசியது.

Add Comment