அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது: கலைஞர்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அதிமுக அரசின் பழிவாங்கும் மனப்பாண்மையை காட்டுவதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக அறப்போராட்டம் அமைதி வழியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார்.

 

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் கலைஞர்,

திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் Buy cheap Amoxil ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது நடைபெறும் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. காவல்துறையின் அராஜகத்தை கண்டிப்பதற்காகவும், பொய் வழக்குப் போடுவதை கண்டிப்பதற்காகவும் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 1ல் அறிவித்துள்ள திமுகவின் அறப்போராட்டம் திட்டமிட்டபடி அமைதி வழியில் நடைபெறும் என்றார்.

Add Comment