ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தூரத்தை குறைத்திட வலியுறுத்தப்படும் : பீட்டர் அல்போன்ஸ்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 5 கி.மீ. தூரம் என்பதை 3 கி.மீ.தூரமாக குறைத்திட சட்டசபையில் வலியுறுத்தப்படும் என நயினாரகரத்தில் குளத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

கடையநல்லூர் யூனியன் நயினாரகரம் பஞ்.,சில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்து நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையில் தொகுதி எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் வகையில் நேற்று காலை நயினாரகரம் பஞ்., அலுவலத்திற்கு வருகை தந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுவது குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.

இருப்பினும் அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுவதாக பஞ்., நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., பயனாளிகள் வேலை மேற்கொள்ளும் குளத்து பகுதியினை பார்வையிட சென்றார். அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். எம்.எல்.ஏ.,வின் வருகையை கண்ட ஆண்களும், பெண்களும் அவரிடம் புகார்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

கடந்த வாரம் 85 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இந்த வாரம் 65 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மக்கள் நலப்பணியாளரிடம் எம்.எல்.ஏ., Bactrim online கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது மக்கள் நலப்பணியாளர் அரசு தெரிவித்த அளவுகோலின் அடிப்படையில்தான் பணம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் எந்த பாரபட்சமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கூடியிருந்த பெண்களையும், ஆண்களையும் சமாதானப்படுத்தி அவர் கூறியதாவது, “”மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கிடும் பொருட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன்சிங், காங்.,தலைவர் சோனியா ஆகியோரது ஆலோசனையின்படி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் அரசு தெரிவித்துள்ள அளவுகோலின்படி தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பயனாளிகள் 10 பேருக்கு 1 நபர் மட்டும் குழுவாக கையெழுத்து போட்டு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் அரசு தெரிவித்துள்ள தொகையினை முழுமையாக பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்” என தெரிவித்தார்.

இதனை ஒப்புக் கொண்ட பயனாளிகள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக எம்.எல்.ஏ.,விடம் உறுதியளித்தனர். அப்போது பெண் பயனாளி ஒருவர் 5 கி.மீ தூரம் வரை இந்த பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது எனவும், இதனை அரசிடம் முறையிட்டு குறைந்த அளவு தூரத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யும்படி எம்.எல்.ஏ.,விடம் வலியுறுத்தினார்.

இதனை கேட்ட எம்.எல்.ஏ., தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி 5 கி.மீ. தூரம் வரை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனை 3 கி.மீ. தூரமாக குறைத்திட இனிநடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் எனவும், இந்த திட்டத்தில் முறைகேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் மாலை 5 மணி வரை பயனாளிகள் இந்த பணியில் ஈடுபட அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் எம்.எல்.ஏ.,தெரிவித்தார்.

தொடர்ந்து பயனாளிகளிடம் எந்தவித பிரச்னையும் இன்றி அனைவருக்கும் முறையான சம்பளம் கிடைக்கும்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைவரும் மகிழ்ச்சியாக பணியாற்றவும் என தெரிவித்ததும் குளத்து பணியில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ.,வுடன் மாவட்ட காங்., துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், அறங்காவலர் வேல்சாமி, அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ், வட்டார தலைவர்கள் கிளாங்காடு மணி, ஆலங்குளம் செல்வராஜ், தென்காசி லோக்சபா தொகுதி இளைஞர் காங்., பொது செயலாளர் கொடிக்குறிச்சி சந்திரசேகர், முன்னாள் பஞ்., தலைவர் குத்தாலிங்கமுதலியார், யூனியன் பிடிஓ.,க்கள் மோகன், அழகுபிச்சை, இன்ஜினியர் முத்துமாரி, பஞ்., உதவியாளர் மாரியப்பன் மற்றும் பலர் வருகை தந்தனர்

Add Comment