குளிருக்கு இதமாய் உடல் குறுக்கி உறங்கையில், என்மேல் பொதிந்து தழுவும், போர்வையாய் உன் ஞாபகங்கள்… உறக்கத்தின் உச்சியில் உளறிய வார்த்தைகள் உள்ளிருந்து நீ அனுப்பிய கவிதையின் மிச்சங்கள்… புன்னகைத்தல், புரண்டு படுத்தல், விளையாடிய பொழுதுகளின் கலையாத நினைவுகள்… விசும்பல், வெறும் உறக்கம்,…

நீயின்றி நானேது? நிஜமின்றி நிழலேது? இறந்த காலம் இறந்தே போகட்டும்! எதிர் காலம் வரும்போது வரட்டும்! நிகழ் காலம் தன்னோடு, கை கோர்த்து உன்னோடு, நாம் நடக்கும் பாதை எங்கும், பூ தூவும் வானமதில், வெண்ணிலவு நீ என்றேன்! ‘பெண்ணிலவு நான்’…

இருட்டறை ஒன்றின் ஓரத்தில் உன் வாசனை தேடி அலைகிறேன்… விழிக்குளம் வற்றியதால் இனி விசும்பல் மட்டும் விகாரமாய்… பர பர சாலையும் , பழகிய சொந்தமும் எரிச்சல் ஊட்டுவதாய் உணர்கிறேன்… நீயில்லா படுக்கையறையும் சமையலறையும் இனி பூனை தூங்க மட்டும் ……

கூட்டணி குளறுபடி கோஷ்டி மோதல் கொடும்பாவி எரிப்பு சொத்து குவிப்பு இலவச அறிவிப்பு இழுபறி தொகுதி போபர்ஸ் காமன் வெல்த் இத்தனைக்கும் மேலே 2G Lasix online …. எங்கேடா போகுது நாடு, தலை சுற்றி பத்திரிக்கை மடிக்கையில்… வீட்டுக்குள் வந்து…

திறந்தே வைத்தேன் என் அறையின் ஜன்னலை… அவள் மேனி தொட்ட காற்று என் சுவாசம் வருமென்று! வந்தமரும் சிறு பறவை அதில் தூது வருமென்று! வாசல் தெளிக்கச் செல்கையில், பல் துலக்கியபடி புன்னகைக்க! மொட்டை மாடி துணி உலர்த்தயில் ஓரப்பார்வை விழு…

நீயும் நானும் நதியும் நாணலும் வளைந்துகொடு , உடையாதிரு… நீயும் நானும் நிலவும் வானும் ஒளிந்துகொள் , விலகாதிரு… நீயும் நானும் மழையும் , முகிலும் பொழிந்துவிடு , பொதிந்தே இரு… நீயும் நானும் கரையும் அலையும் மோதிக்கொள் , தாண்டாதிரு……

பொழிந்து கொண்டிருக்கிறது வானம் முற்றம் நனைக்கும் சாரல் ரசித்த படி நான்… பொழிவின் நினைவலைகள் மட்டும் எப்போதும் பசுமையாய் நெஞ்சில் அவ்வப்போது வந்து போகும்… ஆம்பூரில் ஆலங்கட்டி குளியல் மணலாற்றில் நண்பர்களோடு ஆட்டம் சென்னை மாநகர் சுற்றி தெப்பலாய் நனைந்தது நள்ளிரவில்…

கண் விழிக்கும் காலை  அனிச்சையாய் உனை அணைக்கும் கைகள்!! தேனீர் கேட்டு இரைந்த பின் உதடு கடிக்கும் பற்கள்!! சுகமாய் வெந்நீர் குளியளின்றி வெட வெடக்கும் உடம்பு!! காலை உணவு எண்ணி இப்போதே கலக்கமுறும் வயிறு!! கையசைத்து வழியனுப்ப ஆளின்றி கிளம்ப…

சோம்பல் முறித்து, கண்கள் கசக்கி , கட்டில் விடுத்து, காலணி அணிந்து, வெளிப்படுவான் ஒரு நத்தைபோல்! மணி பத்தாச்சா? பொய்யாய் வியப்பான், புழுதி பறக்க படிகள் கடந்து, தெருவிலிறங்கி நடப்பான்! 1/2 தேனீர், வெண்குழல் வற்றி, ஓசி பத்திரிக்கை, ஓரிரு விவாதம்,…

தினம் தினம் காலை இதே போராட்டம்தான்! அவள் ஓரப்பார்வை, குறு நகை கிட்டாவிடில், அன்றைய பொழுது வீண்தான்! புன்னகை நீளாதா? முறைசொல்லி அழைக்க மாட்டாளா? காத்திருந்தே அலுவல் வாகனம் மறப்பேன்! இதோ இன்றும் கடிகாரம் பார்த்தபடி காத்திருக்கிறேன், கள்ளி அவள் இன்னும்…