ATM மெஷின்கள் பயன்படுத்துப்வரா?எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதை
6th July 2011 · 0 Comments
இன்று முதல் வங்கி ATM களில்,அதாங்க தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், பரிவர்த்தனை செய்யும்போது கவனமா இருங்க.
வங்கியில் போய், நாம் சேமித்த பணத்தை எடுத்திட, கால் கடுக்க நின்றிடும், கஷ்டங்களை போக்க வந்த புண்ணியாத்மாதான் ATM இயந்திரங்கள்.வங்கிகளில் நிரம்பி வழிந்த கூட்டங்கள் கட்டுக்குள் வந்தன. பணம் தேவைபடுவோர் தெருவிற்குத் தெரு புதிதாய் முளைத்த தானியங்கி இயந்திரங்களில் பணம் எடுத்து சென்றனர்.
முதல் ஆப்பு: முதலில், எந்த வங்கியின் ATM இயந்திரங்களில் இருந்தும், நமக்கு கணக்கு உள்ள வங்கியின் டெபிட் கார்டை வைத்து எத்தனை முறை வேண்டுமானாலும்(நம் கணக்கில் பணம் இருந்தால்!), பணம் எடுக்கலாம் என்றிருந்த நடைமுறையினை மாற்றி, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ATM இயந்திரங்களில் மட்டுமே, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். மற்ற வங்கியின் இயந்திரங்களிலிருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே, பண பரிவர்த்தனை பண்ணலாம் என்றும், கூடுதல் பண பரிவர்த்தனை நடந்தால், ரூபாய் இருபது அவர்தம் கணக்கில் இருந்து கழிக்கப்படும் என்றும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது.
முடிந்தவரை ஆப்பு: இன்று முதல், பண பரிவர்த்தனை மட்டுமல்ல, பண பரிவர்த்தனை அல்லாத பிற பரிவர்த்தனைகள், அதாகப்பட்டதாவது, கணக்கில் இருக்கும் இருப்பு அறிந்து கொள்வது, கடைசியாக நடந்த ஐந்து பரிவத்தனைகள் குறித்த அறிக்கையினை பிரிண்ட் எடுப்பது போன்றவற்றையும், பிற வங்கிகளின் இயந்திரங்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே மேற்கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு முறை கூடினாலும், ரூபாய் இருபது நமது வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
சின்ன சந்தோசம்: இந்த நிபந்தனைகள் யாவும், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இயந்திரங்களில் பண்ணும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.என்ன, நீங்கள் வெளியூர் சென்றால், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இயந்திரங்களைத் தேடி ஓடவேண்டும், அவ்வளவுதான்!
தொடர்புடைய செய்திகள்
- Cookies என்றால் என்ன?
- எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts!
- உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!
By admin
Readers Comments (0)
Comments are closed.



