அபூபக்கர் சித்திக் பக்கம்

என்று தனியும் இரத்த தாகம்

என்று தனியும் இரத்த தாகம் உயிர் இழப்பு…கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது!! நம் வீட்டில் நடக்கும் போது,மனம் பிதற்றுகிறது,ஆறுதல் வார்த்தை இன்றி அழுது புலம்புகிறது,ஆறாத வடுவாய் இதயத்தில் இருக்கிறது!!! நம் பக்கத்து வீட்டில் நடக்கும் போது

Continue Reading »

More அபூபக்கர் சித்திக் பக்கம்

நாளைக்கு இன்னாரம் போல நீ எங்கப்பா இருப்ப?

நாளைக்கு இன்னாரம் போல நீ எங்கப்பா இருப்ப? நாளைக்கு இன்னாரம் போல நீ எங்கப்பா இருப்ப? ஒவ்வொரு முறையும் ஊரை விட்டு பயணம் செல்லும் முந்தைய நாளில் பெத்தாட்டு நல்லம்மா இந்த கேள்வியை தவறாமல்

Continue Reading »

அபூபக்கர் சித்திக் பக்கம் Archives

ஒரு போர் எப்போது தொடங்கும்..,
ஒரு போர் எப்போது தொடங்கும்.., மனுஷாளோட சாவ இப்படியா தீபாவளி மாதிரி கொண்டாடுறது.... விஸ்வரூபம் படத்தின் இந்த வசனம் சற்று யோசிக்கவைக்கிறது!!! நரகாசுரன் கொல்லப்பட்டதால் தீபாவளி கொண்டாடப்படுகிறது ஆனால் இந்து இதிகாசங்கள் நரகாசுரனை மனிதன் என்று சொல்வில்லை அரக்கன் என்றுதான் சொல்கிறது...அதனால் அப்படியல்ல என்று நினைத்துக்கொள்ளலாம்!!! தீவிரவாதம்..."ஒர் ...
கடையநல்லூரை விட்டு பிரிந்த நாங்கள் நாடோடிகள்…
நாங்கள் நாடோடிகள்... படித்த பள்ளிக்கூடமும் விளையாடிய தெருவும் அமர்ந்து பேசிய திண்ணையும் சுற்றி திரிந்த இடங்களும் கண்ணுக்குள் நிழலாடுகிறது.... மனைவியின் சினுங்கலும் பிள்ளையின் கொஞ்சலும் நண்பர்களின் அரட்டையும் சகோதரனின் திருமணமும் இதயத்தில் இனிக்கின்றது... நினைவலைகள் நெஞ்சத்தின் கரைகளை உடைத்துக் கொண்டிருக்கிறது... இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு சுவர்களுக்கிடையில்.. முதல் முறை வேலைக்காக ஊரையும் உறவுகளையும் பிரிந்து வெளிநாடு செல்கையில் யாருக்கும் தெரியாமல் கதறி அழுததன் மிச்சக்கண்ணீர் இன்னும் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.... ஒவ்வொரு ...
கடையநல்லூர் கந்தூரி!
நமது ஊர் கந்தூரி.... புதுச்சட்டை போட்டு புட்டாசு வாங்கி தின்று கொடிகட்டு பார்த்து திரும்பிய நாட்களும்.. கந்தூரி கடைக்கு சென்று கலர் கலராய் கண்ணாடி வாங்கி ஒரு கையில் ஊச்சுகுடியும் மறுகையில் ஊத்தாம்மட்டியும் பிடித்து நல்லப்பாவோடு பெரிய தெரு தாண்டி வீடு வந்ததும்.... கந்தூரி துட்டை மாறி மாறி கையால் எண்ணிப்பார்த்து கடைசியாய் முடிவெடுத்து தண்ணீர் துப்பாக்கி வாங்கியதும்... புதியாய் கல்யாணமாகி பெத்தாட்டுக்கு வந்திருக்கும் மாமி மதினி ...
ஆப்பமும்,அடிசாயாவும்…
                          சின்ன சின்னதாய் நாம் அனுபவித்த சந்தோஷங்கள்,சில நேரங்களில் நம் இதயத்தில் நினைவுகளாக கூடி நம்மை கொள்ளையிட்டுபோனதுண்டு... அப்படி ஒரு சந்தோஷம்தான் இந்த புகைப்படத்தை பார்க்கும் போதும் தோன்றுகிறது எனக்கு... ஆம் அது.... ஆப்பமும்,அடிசாயாவும் பெரும்பாலும் நமது ஊரில் மேல்ரோட்டில் உள்ள சாயா கடைகளில் கிடைத்தாலும் பாளையத்தன் ...
பள்ளிப்பருவத்தில்…எத்தனை நினைவுகள்
பள்ளிக்கூடத்தில் படித்த வாழ்க்கை பசுமையாய் இதயத்தில் இருக்கிறது அதை நினைக்கும் போதெல்லாம் எண்ணப்பறவை மன வானில் உயரத்தில் பறக்கிறது... சிலேட்டேடும் குச்சியோடும் வாசம் செய்ததும்.. சில நேரங்களில் குச்சியை ருசிபார்க்க மென்று தின்றதும்.. கன்னியா குமரி சென்ற மாமா கடல் குச்சி வாங்கி வர எழுதினால் கரைந்து விடும் என்று எழுதாமலே ஒரு மாதம் வைத்திருந்ததும்... சிலேட்டில் ...
கடி சிறிசு வேதனை பெரிசு….- அபூபக்கர் சித்திக்
கடி சிறிசு வேதனை பெரிசு.... கடையநல்லூரிலும் அதை சுற்றி இருக்கும் ஊர்களிலும் திடீரென்று பரவி வரும் மர்ம காய்ச்சல் மற்றும் உயிர் இழப்புகள்,இன்னும் அதற்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை... டெங்கி,டைபாய்டு,மலேரியா,சிக்கன் குனியா போன்ற காய்ச்சல்களால் உடலின் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் வெகுமாக குறைந்து மோசமான நிலைக்கு தள்ளிவிடுகிறது ...
அன்னை பூமி அய்யோ பிரிவதா…
அன்னை பூமி அய்யோ பிரிவதா... அதோ அந்த தெருவில் நடக்கும் போதெல்லாம் இது என் சொந்த ஊர் என்ற கர்வம் எனக்கு அதிகம் தான்.. முதல்முறை வெளிநாடடுக்கு பயணம் செல்ல நேர்ந்தபோது,எங்கள் ஊரில் இரயில் நிலையத்தில் உறவுகள் சூழ வழியனுப்பிவைக்கபட்ட போது, இரயிலின் வாசலில் நின்று கொண்டே பாம்பன் கோவில் சந்தை ...
சின்னத்திரை மோகம் கொல்வோம்…
சின்னத்திரை மோகம் கொல்வோம்... மக்ரிப் தொழுகைக்கான நேரம் நெருங்குவதற்கு முன்பு வரை வேலைகள் சுறு சுறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நமது வீடுகளில் அன்றைய காலத்தில்... மாலை நான்கு மணிக்கு மேல் சாயா கடையில சாயாவும்,சில நேரங்களில் முறுக்கு அல்லது பணியாரமும் சிறு பசி போக்கிவிட்டு,தறி நெய்தல்,தார் ...

Next Page »