படைப்புகள்
அஞ்சல் செய்யாத கடிதம் – 5 பிரிவதற்கா இணைந்தோம்..?
அஞ்சல் செய்யாத கடிதம் – 5 பிரிவதற்கா இணைந்தோம்..? என்னங்க…. எப்படிங்க உங்களால இப்படிச் சொல்ல முடிஞ்சுது? “அறுத்து உட்றுவேன்னு”அடிச்சுச் சொல்றீங்களாமே…? அறுக்கறத்துக்காகவா கட்டுனீங்க…! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…! அப்பா,அம்மா,சொந்தம்,பந்தம்,எல்லாத்தையும் விட்டுட்டு.. “என் கணவன்தான்”னு
More படைப்புகள்
கடையநல்லூரின் எழில்மிகு ஊராணி!-செங்கோட்டையன்
என்னருமை என்னூரின் எழில்மிகு ஊராணியே எத்தனை காலங்கள் உன்மேல் விழுந்திருப்பேன் நீ விரித்த படிகளில் நீந்திப்பழகினேன் அன்று. நீந்துகின்ற நிலையிலே நீயில்லையேன் இன்று தண்ணீரால் ஊருக்கு தானம் செய்ததால் தன்னிகரில்லா ராணியாகப்போனாயோ இல்லை ஊரின்
படைப்புகள் Archives
பெற்ற தாயை போற்றுவோம் கருவறையில் இடம் தந்து களைப்பாற மடி தந்து பசியாற உணவு தந்து வாய் பேச வார்த்தை சொல்லி தந்து நாம் கண் அயர அவள் கண் விழித்து கதை சொல்லி தூங்க செய்து நடை பயில கரம் பிடித்து நம் வாழ்க்கைக்கு வழி காட்டி ஒளி ஏற்றுபவள் நம்மை பெற்ற ... தாரு சுத்தி பாவோடும் ராட்டு போனதெங்கே…-செங்கோட்டையன்
சட்டக்கு புட்டக்கு என்று தறி சத்தம் போட்டதெங்கே ஓடத்தோடு உறவாடும் பழைய பாட்டு போனதெங்கே தாரு சுத்தி பாவோடும் ராட்டு போனதெங்கே ராகத்தோடு என்னையழைக்கும் நல்லம்மா போனதெங்கே பறந்து பறந்து பாவாத்தும் நல்லாப்பாவும் எங்கே பாவை முதுகில் தாங்கி நிர்க்கும் குதிரனையுமெங்கே குனிந்து குனிந்து ஆத்துகிற புல்லும் கீரீயுமெங்கே புலராத காலையிலே பூமிலடிக்கும் முளையும் கொட்டுபிடி எங்கே அல கம்புபெறக்கி காசுவந்த காலம் போனதெங்கே காலணாவாய் சேர்த்து ... வெளிநாட்டு வாழ்க்கையால் அன்பை பெறமுடியாமல் தவியாய் தவிக்கிறேன்! என்னடா வாழ்க்கை இது… -செங்கோட்டையன்
தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் தலையணையில் தலை புதைத்து தூங்கிக்கொண்டிருந்தாள் ஸமா. தூக்கத்தின் இடையே விம்மியவளாயிருந்த ஸமாவை அருகில் உட்கார்ந்தவாறு கண் இமைக்காமல் கண்டு கொண்டிருந்தான் அப்துல்லாஹ். சுமார் மூன்று வயதை நெறுங்கிய நிலையில் காணப்பட்ட ஸமா கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் வசீகரமாக காணப்பட்டாள். ... வான் மேகங்களே…-செங்கோட்டையன்
வான் மேகங்களே நீங்கள் வாஞ்சையோடு எங்களை பாருங்களேன் மலை முகடுகளில் முண்டியடித்து மூழ்கியது இன்னும் முடியலையா முடிவில்லா அனலாய் கோடை வெயிலாய் சுட்டெரித்து கொட்டுகிற கொடுமைக்கு குடைபிடிக்க குழம்புவதேன் மேகமாகி வேகமாகி வெண்ணிற பஞ்சாகி ஆவியாய் அலைவதேன் பாவியாக நாங்களெல்லாம் பகலிலே படுகிற பாடுகளை பார்த்தும் பாராமலும் பறந்தலையும் உனக்கு ... வெளிநாட்டு மோகம் வந்து கூடிவாழ்ந்த நம்மையெல்லாம் எப்படி துண்டாடி விட்டது!- செங்கோட்டையன்
பிரிந்தவர் கூடினால்.. “அஸ்ஸலாமு அலைக்கும் ஹமீது பாய் எப்படியிருக்கிறீர்கள். வெகு காலமாகி விட்டது நாம் இருவரும் இப்படி கால் நடையாக நடந்து வந்து அட்டகுளத்து கம்மாயில் காலார உட்கார்ந்து உலகத்தைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நம் வீட்டைப்பற்றியும் பேசி முப்பது வருட காலங்கள் கடந்து போயிருக்கும் ... அஞ்சல் செய்யாத கடிதம் – 4-முடிவுதான் முடிவா?
அஞ்சல் செய்யாத கடிதம் - 4 முடிவுதான் முடிவா? கோழையே....! உன் முட்டாள்தனத்தைக் கேட்டுத் துடிதுடித்துப் போனேன்.என்ன ஆயிற்று உனக்கு? செத்து மடியுமளவுக்கு அப்படி என்னடா கொடுமை நேர்ந்துவிட்டது? நாக்கு வெளித்தள்ளி, கண்கள் பிதுங்கி, கழுத்து நரம்புகள் அறுபட்டு, ரத்த ஓட்டம் சுண்டி... நீ... நீ... தூக்கில் தொங்கிவிட்டாயா? யேய்... யேய்.... ... அஞ்சல் செய்யாத கடிதம் – 3-கற்றுத் தாருங்கள் ஐயா…!
அஞ்சல் செய்யாத கடிதம் - 3 கற்றுத் தாருங்கள் ஐயா...! ஹெட் மாஸ்டருக்கு...! உங்க பழைய்ய்ய்ய மாணவனின் ஸலாம் என்னை ஞாபகமிருக்கா சார்! மூக்கொழுக கடேசிப் பெஞ்சின் கடேசி மாணவனாக உட்கார்ந்து ‘டேய் கடேசி’ என்று உங்களால் செல்லமாய் அழைக்கப்பட்டவன்.எனக்கு வகுப்பாசிரியராக இருந்த நீங்கள் இன்று தலைமையாசிரியர்.சந்தோசமாக இருக்கிறது சார். நான் ... காவலனே என்னை காண வரவில்லையேன்-செங்கோட்டையன்
காவலனே என் காவலனே—என்னை காண வரவில்லையேன் காவலனே பாவலனே என் பாவலனே- உந்தன் பாவையும் இங்கே வாடுவதேன் வெண்ணிலவே ஓ.. வெண்ணிலவே மேகங்களுக்குள் ஓடுவதேன் வெண்ணிலவே தென்றலெங்கே வீசும் தென்றலெங்கே-என் தென்னவனெங்கே கொஞ்சம் கூறுங்களேன் காதலென்னும் மாளிகையை கடல்மண்ணால் கட்டிவைத்தேன் கரையென்று தெரிந்திருந்தால் கட்டுவதை விட்டிருப்பேன் கடல்விட்டு வந்த அலையோ பட்டாக தழவி விட்டு தட்டிவிட்டு ...
Next Page »


