முடவன் குட்டி பக்கம்

பூர்வீகத்து வீடு -முடவன்குட்டி -கவிதை

கரை சேராத் தங்கச்சி அடைபடா கடன் சதா தலையுள் கொதிக்க தறி இழுக்கையிலேயே மூச்சுத் திணறிச்செத்த சின்ன அண்ணன் பீடிப்புகை “உள்ளூட்டில்”  கமறும்: ‘தனிக்குடித்தனத்துக்கு வெளியூர் அழைச்சுப்போக அவுக வருவாக’-வென காத்திருந்து- ஆற்றாது அக்கா

Continue Reading »

Print Friendly

More முடவன் குட்டி பக்கம்

வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ? முடவன் குட்டி

பெரு விரல் பருமனில் நீளமான கயிறு. தூணோடு நிற்க வைத்து, கைகள் இரண்டையும் பின்னால் வளைத்துக் கட்டி, வயிற்றையும் இரண்டு சுற்று சுற்றிக் கட்டினார் அண்ணன். மீதிக் கயிற்றின் நுனியில், நிதானமாக முடிச்சுப் போட்டார்.

Continue Reading »

Print Friendly

முடவன் குட்டி பக்கம் Archives

சாகுமோ எனது ஊர்-முடவன்குட்டி
சட்டக்..... சட்டக்.... சட்டக் ...... தறி நெய்யும் உழைப்பின் இசை காதில் விழவில்லை....   'பாவு' ஆத்தி நடந்து தளர்ந்த வாப்பாமார் காலடிச்சுவடுகள் கீழே அழுந்தி நேரிபடுவது அறியாமல்.... தெருக்களில் வழுகி வழுகிப் போகின்றன ... 'டாட்டா  சுமோக்கள்' ... டிவி..கிரிக்கெட் ராட்சச ஒளிப் பாய்ச்சலில் பார்வை தொலைத்த கபடி... நீச்சல்... விளையாட்டுக்கள் பழைய ஞாபாகங்களில் தமது கண்கள் தேடி அலைகின்றன...   தறி ...
வந்த வழி- ( சிறு கதை )முழுக் கதை -முடவன் குட்டி
வந்த வழி- ( சிறு கதை )- முடவன் குட்டி ” வேய்..  கலீல் ...வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா  நான் என்ன செவுட்டுப் ...
எழுதிச் செல்லும் விதியின் கை – முடவன் குட்டி
       சுவர்க்கடிகாரம் நான்கு முறை அடித்தது, எங்கேயோ ரொம்ப தூரத்திலிருந்து கேட்பதுபோல காதில் விழுகிறது. பாதித் தூக்கத்தில் புரண்டு படுக்கிறேன். மனைவி குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் அம்மாவுக்கும் ராத்திரி நடந்த சண்டை நினைவுக்கு வர, தூக்கம் வள்ளிசா  போயே விட்டது.         ...
விடுதலை(சிறுகதை) -முடவன் குட்டி
சலூனுக்குப் போய் ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. முடி வெட்டிக் கொள்ள வேண்டும்: மனைவி தினமும் தொண தொணக்கிறாள். ஆபிஸில் ராவ், 'ஏ முண்டம்..இது என்ன ஆபிஸா.. சந்தை மடமா.. ? ஒழுங்கா ஹேர் பண்ணிட்டு லட்சணமா வா.. திருப்பியும் மொட்டைபோட்டுட்டு வந்தியோ ...
இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னுமொரு பெண் ( கவிதை- முடவன்குட்டி )
இருட்குவியலாய் கக்கூசில் விழுந்து கிடப்பான் புருஷன்- இன்னும் தெளியாத குடிபோதையில். அவனை அள்ளி குளியறை போகையில் "குழம்பா இது..தூ.." எங்கோ பார்த்து காறித் துப்புவான் நாலாவது முறையாய் எஸ் எஸ் எல் சி எழுதிய கொழுந்தன். "உடுத்தி.... மினுக்கி ..ஆபீஸ் போறாளோ.. வேற எங்காச்சும் போறாளோ.."- வீட்டோடு இருக்கும் நாத்தனார் வெறுப்பு உமிழ்வாள். சன்னல் கம்பிகளூடே -பூட்டிய அறைக்குள் எட்டிப்பார்ப்பாள்-குழந்தையை: "பளா"-ரென சன்னல் கதவை அறைந்து ...
மதத்தின் பெயரால் நடந்த கலவரத்தில் சபிக்கப்பட்ட மனிதனை முன்வைத்து …..(முடவன்குட்டி – கவிதை )
இவன் மனிதனா..? திடுக்கிட்டு நின்றது காற்று: கருகித் தீய்ந்தது சூரியன்: வதங்கி உதிர்ந்தன தளிர் இலை பூக்கள் .. மனிதனல்ல மிருகம்: இமையாது உருளும் கண்களாய் காது மடலோரம் பதுங்கிற்று- சட்டம்: காவலோ- புறந்தலை குறிவைத்து அரவமற்றுப் பின் தொடரும்: நீ தான் மிருகம் / இல்லை நீ தான்: சொல்லியும் சொல்லாது நழுவியும் ...
பெயரில்லாத ஒரு பூச்சியும் …. நானும் ( கவிதை – முடவன்குட்டி)
நீலச்சிறகுகள் விரிய மிதந்தவாறே பறந்துவந்தது அது ... வண்ணத்துப் பூச்சியா ..? வேறா..? பகுத்து அறியும் வலையுள் வீழ்ந்தேன் - கண் நழுவி காணாமல் போயிற்று..... அ.... அதோ .. புராதன கோப்புகள் தூங்கும் அடுக்கொன்றின் மூலையில் - சுண்டுவிரல் அகல இடைவெளியுள் சில துளி இலைகள் .. உலர்ந்த இலை நரம்புகள் .. என கருக்கொண்டிருந்தது ஒரு ...

Click here to add Widgets