GOOGLE வழங்கும் அசத்தலான மூன்று வசதிகள்
24th June 2011 · 0 Comments
மிக பிரபலமான கூகிள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. நாளாந்தம் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகிள் நிறுவனத்தின் படைப்புக்களில் இருந்து அண்மையில் வெளிவந்த அசத்தலான 3 வசதிகள்
1. GOOGLE VOICE SEARCH
கையடக்க தொலைபேசிகளில் பயன்பட்ட இந்த தேடல் முறை இப்போது கூகிள் ச்ரோமில் நிறுவப்பட்டுள்ளது . நீங்கள் தேடும் வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் தேடும் விடயங்களை தேடி தருகிறது . தற்போது இந்த வசதி கூகிள் ச்ரோமில் மட்டுமே உள்ளது .
உங்கள் மைக்ரோ போனை தயார் செய்துகொண்டு மைக் பட்டன் கிளிக் செய்தால் SPEAK NOW என தோன்றும் போது நீங்கள் தேடும் சொல்லின் வார்த்தையை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கான தேடல் ஆரம்பமாகும் .
2. TAMIL GOOGLE TRANSLATE
ஆங்கில மற்றும் பிற மொழியில் உள்ள தகவல்களை அப்படியே தமிழுக்கு மொழிமாற்றம் செய்துகொள்ள கூடிய வசதியினை அளித்துள்ளது. இதன் மூலம் ஆங்கில மற்றும் பிற மொழி வசனங்களை தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியும் .
3. IMAGE SEARCH
இதுவரை காலமும் புகைப்படங்களை தேடித்தந்த வசதியுடன் . மேலும் மெருகூட்டப்பட்ட வசதியாக புகைப்படங்களை கொடுத்து தேடினால் அதற்கு ஒப்பான புகைப்படங்களையும் அவை உள்ள தளங்களையும் காண்பிக்கிறது இதன்மூலம் உங்கள் படங்கள் எங்கு உள்ளன என கண்டுகொள்ள முடியும் .
இந்த வசதியினைபெற கூகிள் இமேஜ் தேடு பக்கத்தில் சென்று தேடும் பெட்டியில் உள்ள கமரா பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும் அதிலே நீங்கள் தேடவிரும்பும் படத்தினை UPLOAD செய்தால் நீங்கள் வழங்கிய படத்திற்கு ஒப்பான படங்களை பெறுவதுடன் அவை எந்த தளங்களில் உள்ளன என அறிந்துகொள்ள முடியும்.
தொடர்புடைய செய்திகள்
- Cookies என்றால் என்ன?
- எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts!
- உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!
By admin
Readers Comments (0)
Comments are closed.





