IDC ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா
16th February 2012 · 0 Comments
அஸ்ஸலாமு அலைக்கும்
நிகழ்ச்சி 1
IDC சார்பாக வரும் குவைத் நேசனல் தினத்தை முன்னிட்டு மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்ஷாஅல்லாஹ் வரும் 24-02-2012 சனிக்கிழமை அன்று ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான இஸ்லாமிய வினாடி வினா போட்டிகள்.மதிய இடைவேளையில் சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் அதனை தொடர்ந்து மதிய உணவு இடைவேளை அடுத்து மவ்லவி: சையத் முஹம்மத் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர் குவைத்) அவர்களின் உரை அடுத்து அஸர் தொழுகைக்கான இடைவேளை அதனை தொடர்ந்து மவ்லவி : அப்துல் மஜீத் மஹ்ழரி (முதல்வர் ஆயிஷா சீத்தீகா மகளிர் அரபிக்கல்லூரி காயல்பட்டிணம்) அவர்களின் சிறப்புரை இறுதியாக நடந்த போட்டிகளுக்கான பரிசளிப்பு வழங்கி இறுதி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.
தலைப்பு: சத்தியம் எது? அசத்தியம் எது?
நிகழ்ச்சி 2
நாள்: 27-02-2012 திங்கள்கிழமை
இடம்: டீச்சர் சொசைட்டி வளாகம், மன்காப்
நேரம்: இரவு 7.30 மணி
இயற்கை மார்க்கம் இஸ்லாம் (முஸ்லிம் அல்லாத சகோதார்களுக்கான அழைப்பு)
முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுப்பதுடன் இஸ்லாத்தை பற்றிய அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி.
தலைப்பு: தலைப்பு: நம்மை படைத்த கடவுள் யார்?
நிகழ்ச்சி 3
73 வது மாத பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி
நாள்: 27-02-2012 திங்கள்கிழமை
இடம்: அல்அமல் இந்தியன் ஸ்கூல், சால்மியா.
மவ்லவி : அப்துல் மஜீத் மஹ்ழரி (முதல்வர் ஆயிஷா சீத்தீகா மகளிர் அரபிக்கல்லூரி காயல்பட்டிணம்) அவர்கள் அனைத்து நிகழ்ச்சியிலும் உரையாற்றுகிறார்கள்.
தலைப்பு: மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுவோம்
தொடர்புடைய செய்திகள்
- குவைத்தில் இன்று (20.05.2012) முதல் பஸ் கட்டண உயர்வு !
- குவைத் வாழ் தமிழ் பெற்றோர்களே! – அவசரச் செய்தி
- மே 18 துபாயில் இலவச சட்ட உதவி முகாம்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


