ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது நில மோசடி புகார்!

வாழும் கலை அமைப்பின் தலைவரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது வெளிநாட்டு இந்தியர் ஒருவர் நில மோசடி புகார் கொடுத்துள்ளார்.

பால் என்பவர் கூறியுள்ள இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

கனகபுரா பகுதியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆஸ்ரமத்திற்கு அருகில் இருந்த 15 ஏக்கர் நிலத்தை மோகன் என்ற விவசாயிடமிருந்து, 12 வருடங்களுக்கு முன்பு ரூ.1.2 கோடி கொடுத்து வாங்கினேன். அந்த விவசாயி எனக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தார். முறையான பதிவு செய்வதற்கு முன்னால் மோகன் இறந்து போனார்.

மோகனின் மகனான விஜய்யுடன் பேசிப் பார்த்தேன். நிலத்தை என்னிடம் ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக நான் நீதிமன்றம் சென்றேன். அதற்கு முன்பாக விஜய் அந்த நிலத்தை ரவிசங்கரின் ஆஸ்ரமத்திற்கு விற்றுவிட்டார். இந்த நில விவகாரத்தை முடித்து தருவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு Doxycycline online முன்னர் ரவிசங்கர் உறுதி அளித்தார். ஆனால் இப்போதோ அந்த நிலத்தை மறந்து விடு என்கிறார். அரும்பாடுப்பட்டு நான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய நிலம் அது. அதை மீட்டு தாருங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

பெங்களுர் குமார சாமி லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு முன்பாக பால், அக்னி ஸ்ரீதர் என்பவர் மூலம் ரவிசங்கரின் ஆஸ்ரம நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால், அதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை என்பதால் தற்போது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

முன்னதாக, பணம் கேட்டு சிலர் போனில் மிரட்டுவதாக ரவிசங்கரின் ஆஸ்ரமம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Comment