லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்: 41 பேர் பலி

பாகிஸ்தான், லாகூரில் உள்ள மசூதி ஒன்றில் தீவிரவாத தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாயினர். 175 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

லாகூரில் உள்ள தத்தா தர்பார் ஷ்ரைன் மசூதிக்குள் நேற்றிரவு தீவிரவாத தற்கொலைப் படை நுழைந்தது. கூட்டம் நிறைந்த வாசலில் ஒன்று, அடித்தளத்தில் ஒன்று, அங்குள்ள சந்தை சாலையுடன் மசூதி இணையும் பகுதியில் ஒன்று என மூன்று இடங்களில் தற்கொலைப் படையினர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்தத் Buy Viagra தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலியாயினர். 175 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் 25 க்கும் மேற்பட்டோர் உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளனர்.

இந்தத் தற்கொலைப் படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதிபர் சர்தாரியின் கண்டனச் செய்தியில் தீவிரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்களால் அவர்கள் மீது எடுத்துவரும் நடவடிக்கைகளை அரசு நிறுத்தி விடாது என்றும் கூறியுள்ளார்.

Add Comment