கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…

கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…

கடையநல்லூர் மக்கட்டி குடும்பத்தை சேர்ந்த துராப்ஷா என்பவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இஸ்லாத்தையும்,நபிமார்கள் பற்றியும் அவதூர் செய்திகள் வெளியிட்டதன் விளைவாக கடையநல்லூர் வாழ் இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளானதை தொடர்ந்து.

இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்தையும்,இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை ஏளனம் செய்யும் வகையில் நடந்து வரும் மக்கட்டி துராப்ஷா என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(31.01.2012) காலை பரசுராமபுரம் ஜும்மா பள்ளியில் வைத்து கடையநல்லூர் ஜமாத்துல் உலமா மற்றும் பரசுராமபுரம் பள்ளி ஜமாஅத் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷா -வை விசாரணைக்கு அழைத்தனர்.

சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியே ஆகவேண்டும் என்று  பொதுமக்கள் எதிர்ப்பு குரல் எழும்பியதை தொடர்ந்து,ஜமாத்தார்கள் தீர்ப்பை வாசித்தனர்.

1.இஸ்லாத்திற்கு இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பேசிய இவர் இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார்.

2.கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடைய மையித்தை அடக்கம் செய்ய கூடாது.

3.எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

Buy Lasix Online No Prescription #ff0000;”>4.இவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முறிந்துவிடும்.

இவ்வாறு ஜமாத்தார்கள் கூடி அறிவித்தனர்.இந்த தீர்ப்பை மக்கட்டி துராப்ஷாவிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி கையெழுத்து வாங்கி கொள்ளபட்டது. 

இந்த கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷாவின் சார்பில் வந்திருந்த சிலரும் அவரை தண்டிக்க வேண்டுமென்றே முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து பரசுராபுரம் பள்ளியின் உள்ளேயும்,வெளியிலும் இளஞ்சர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இதனால்  எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் இருக்க போலீசாருக்கு தகவல் தெருவிக்கபட்டு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Add Comment