கடையநல்லூர் கவி – க. து. மு. இக்பால்

க.து.மு.இக்பால் (பி. 1940) தமிழ்நாட்டின் சிறந்த, வாழும் கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் கடையநல்லூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா ஆவர். இவர் தற்பொழுது சிங்கப்பூரில்வாழ்கிறார். இவர் எழுதத்தொடங்கிய ஆண்டு 1956. இதுவரை இவர் 7 கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

வெளியிட்ட கவிதை நூல்கள்

 • இதய மலர்கள் – 1975
 • அன்னை (கவிதை Buy cheap Levitra நூல்) – 1984
 • முகவரிகள் – 1989
 • வைரக் கற்கள் – 1995
 • கனவுகள் வேண்டும் – 2000
 • காகித வாசம் – 2003
 • வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் – 2005

கவிஞர் இக்பால் உலக அளவிலே பல பெருமைகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.

கவிஞர் இக்பால் பெற்ற விருதுகளும் பெருமைகளும்

 • சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் மையமும் மோங் பிளாங்க் [Mont Blanc] பேனா நிறுவனமும் இணைந்து வழங்கிய இலக்கிய விருது (1996)
 • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் “தமிழவேள் இலக்கிய விருது (1999)
 • தாய்லாந்து அரசு வழங்கிய தென்கிழக்காசிய இலக்கிய விருது (2001)
 • சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் “கலா ரத்னா” விருது (2004)
 • முகவரிகள் நூலுக்குச் சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டுக் கழகப் பாராட்டு விருது (1990)
 • சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்ற ஆதரவில் தண்ணீர் எனும் கவிதை எம்.ஆர்.டி.ரயில் வண்டிகளில் இடம்பெற்றது ( 1995).
 • ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ-2000 எனும் மாபெரும் கண்காட்சியில் கோய்த்தே இன்ஸ்ட்டியூட (Goethe Institute) ஆதரவில் “தண்ணீர்” கவிதை இடம்பெற்றது.
 • தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில் நவம்பர் 2005 இல் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளியல் உச்சநிலை மாநாட்டில் “மாலைப் பண்” என்னும் கவிதை இடம்பெற்றது. “Representative Poetry of participating nations in 2005 APEC” எனும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.
 • தேசியக் கலைகள் மன்றம் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட சந்தங்கள்:சிங்கப்பூர்க் கவிதைகள் ஆயிரத்தாண்டுத் தொகுப்பு (Rhythms:A Singaporean Millennial Anthology of Poetry) நூல் ஆசிரியர் குழு உறுப்பினர்
 • தேசியக் கலைகள் மன்றத்தின் இலக்கியக் குழு உறுப்பினர் (Arts Resource Panel , Literature 2004- 2006)

Source : wikipedia

Add Comment