அயல்நாடு !

அயல்நாடு!
சிறாரும் முதியோரும்,
சீராட்டும் தாய்மாரும்,
தம் கனவே என ஏங்கும் அயல்நாடு!

எனதருமை ஊராரும்,
என்னுயிரின் உற்றாரும்,
வளம்பெருக்க விரைந்ததோர் அயல்நாடு!

தம் குடும்பம் தளைத்தோங்க,
தமக்கைகள் மணமுடிக்க,
விதிஎனவே தலைப்பட்டதோர் அயல்நாடு!

ஓடி உழைத்துக் Buy Levitra Online No Prescription களைக்கையில்,
தொலைபேசியில் மணத் தூதுவர,
ஆசை அடக்கி அடைபட்டதோர் அயல்நாடு!

மணமுடித்த மறுமாதம் பயணம்,
மந்திரித்த கோழியாய் மனம் பதற,
கண்கசக்கி கரை சேர்ந்ததோர் அயல்நாடு!

காதலை செல்பேசிக்கும், கண்ணீரை கடிதங்களுக்கும்,
காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்போரை,
ஏளனமாய் பார்க்கிறதோ?
விழுங்கிவிட்ட அயல்நாடும், விலகிவந்த தாய்நாடும்..!!!

Add Comment