500,1000 ருபாய் நோட்டுகளை மாற்ற வலி தெரியாமல் அவஸ்தையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் புறப்படும்போது அவரவர் விமான நிலையத்திலிருந்து தங்கள் ஊருக்கு செல்வதற்காக காருக்கான செலவு மற்றும் வழிச் செலவுக்காக இந்தியப் பணம் கையில் எடுத்துச் செல்வது வழக்கம்.

அதை பெரும்பாலும் இங்குள்ள தனியார் அந்நிய செலவாணி நிறுவனங்களில் இந்தியப் பணமாக மாற்றிக் கொள்கிறோம்.

வெளிநாட்டிலிருந்து தாயகம் வருபவர்கள் சட்டப்படி 10,000 ரூபாய் வரை கொண்டு வரலாம் என அரசாங்கமே சலுகை அளித்துள்ளது.

பஹ்ரைன் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

மற்ற மற்ற நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

சாராசரியாக ரூபாய் நாலாயிரமாவது (500/ 1000 ரூபாய் நோட்டுக்களாக) அவர்கள் கைவசம் இருக்க வாய்ப்புள்ளது.

இப்படி இந்தியர்களிடம் கையிருப்பாக இருக்கும் பணம் கோடி கோடியாக இருக்கும் என்பது அரசாங்கத்திற்கும் தெரியும்.

இது ஒண்ணும் கணக்கு காட்டப்படாத கறுப்பு பணமல்ல. சொந்தத்தை விட்டு , சுற்றாரை விட்டு இந்த பாலைவன பூமியில் பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்த பணம்.

இப்போது அந்த பணத்தை இங்குள்ள அன்னியச் செலவாணி மாற்றகத்தில் மாற்றிக் கொள்ள இயலாது என்று கூறி விட்டார்கள்.

அந்த பணத்தை ரிஜிஸ்தர் கவரில் வைத்து ஊருக்கு அனுப்பினாலும் சட்டப்படி குற்றம். விசாரணை என்ற பெயரில் அந்த முகவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் அலைக்கழிக்கப்படுவார்.

டிசம்பர் 30-க்குள் இதற்காக யாரும் அவரவரிடம் கைவசமிருக்கும் பணத்தை மாற்றுவதற்காக யாரும் இந்தியா புறப்பட்டுப் போகப் போவதில்லை.

ஆக… எங்களெல்லோருக்கும் நாமம்தான்.

அப்துல் கையூம்

Add Comment