அன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்

அன்புச்சகோதரியே,

நீ அறுபத்தெட்டு வயது நான் 54 வயது உன்னை அம்மா என்று அழைக்க முடியாது.
உன் படங்களையோ,எம் ஜி ஆர் படங்களையோ பார்க்கவே கூடாது என்று இன்று வரை வைராக்கியத்தில் இருப்பவன் நான்.உன்னையும்,எம்ஜிஆரையும் பரம எதிரியாக பார்ப்பவன் நான்.அப்படிப்பட்ட நான் நீ இறந்த பிறகு என்னையறியாமல் ஒரு இரக்கம் தோன்றுகிறது.

மோடி உன் பேரைக்கேட்டாலே மூத்திரம் போய்க்கொண்டிருந்த காலம் போய் இன்று மோடியைப்பார்த்து உன் அடிமைகள் மூத்திரம் போய்க்கொண்டிருக்கின்றனர்.

அம்மா அம்மா என்று உன் காலடியில் கிடந்த
அத்துனை மந்திரிகளும்,எம்பிக்களும் எம்எல்ஏக்களும்,மாவட்ட செயலாளர்களும்
நீ இறந்ததற்கு வருத்தப்பட்டதாகவே தெரியவில்லை, உனக்காக வருத்தப்பட்டு அழுதது எம்ஜிஆர் ஐ தெய்வமாக கொண்டாடிய சாதாரண தொண்டன்தான்.நீ நம்பிய எவனும் உனக்காக கலங்காததைக்கண்டு மனம் பதறிப்போனது.என் உறவினர்களை நம்பி நான் ஏமாந்த வேதனை போன்று மனம் பதறியது.

உனக்காக உண்மையில் வருத்தப்பட்டது,மனம் கலங்கியது என்னைப் போன்று உன்னை எதிர்த்தவர்கள் தான்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின் அரசியலே வேண்டாம் என பலமுறை ஒதுங்க நினைத்த உன்னை வற்புறுத்தி அரசியலில் இறங்க வைத்து பயனை அவர்கள் அடைந்து விட்டு உன்னை பாடையில் கிடத்தி விட்டனர்.

உன் உறவினர்களை கூட உன்னை பார்க்க அநுமதிக்காமல் கவனமாக பார்த்துக் கொண்டதன் விளைவு கடைசியில் உனக்கு என்ன நடந்தது என்று எவனுமே அறிய முடியாதபடி செய்து விட்டார்களே.உன் இரத்த சொந்தங்கள் உன் உடன் இருந்து இருந்தால் இந்த நிலை உனக்கு கண்டிப்பாக ஏற்பட்டிருக்காது.அவர்கள் சேராதவாறு பார்த்துக்கொண்டார்களே பாவிகள்.

உன்னைக்கண்டு சினிமா உலகம் மட்டுமல்ல,பத்திரிகை உலகம் ஜெயலலிதா என்ற பெயரைக்கேட்டாலே நடுநடுங்கி போகுமே அப்படிப்பட்ட உன்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் என்ன பாடுபடித்தினரோ இந்த படுபாவிகள்.

அப்பல்லோவில் உன்னை அநாதைப்பிணமாக போட்டுவிட்டு போயஸ்கார்டனில் பொங்கல் கொண்டாடிய பாவிகளை நீ இனம் காண மறந்துவிட்டாயே.

ஊரெல்லாம் வளைத்துப்போட்டு சொத்து குவிப்பு வழக்கில் உன்னை முதல் குற்றவாளி ஆக்கியவர்களை அடையாளம் காண மறந்து விட்டாயே.

எத்துனை உன் நலம் விரும்பிகள் சொல்லியும் நம்பாத நீயே உன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டாயே.

மூச்சுக்கு மூச்சு அம்மா தான் கட்சி என்று சொன்னவர்கள் நீ இறந்த பின் அதிமுக வெற்றி பெறுவதற்கு ஜெயலலிதா மட்டும் காரணமில்லை என்று நா கூசாமல் சொல்லும் பாம்புகளுக்கா பாலை வார்த்தாய்.

அன்று மன்னார்குடி மாபியாக்களை அனுப்பியதோடு அவர்களை மறந்திருந்தால்
இன்று உயிரோடு நீ இருந்திருப்பாயே.

சங்கராச்சாரியாரின் சங்கில் ஏறி மிதித்தவள் நீ தான்.

கலிங்கப்பட்டி கருநாகத்தின் பல்லை பிடிங்கி பொடாவில் போட்டவளும் நீ தான்

குருவை குறிவைத்து குத்தியவளும் நீ தான்

ராப்பிச்சை ராமதாசை லாக்கப்பில் போட்டு லாடம் கட்டியவளும் நீ தான். அப்படிப்பட்ட நீ மன்னார்குடியின் மகுடியில் மயங்கி சாய்ந்து மரணமாகிவிட்டாயே.

உன்னை புகழ்வதால் எங்களுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை .நீ உயிரோடு இருக்கும் போதுதான் நாங்கள் பலமான எதிர்க்கட்சி ஆனோம்.

உன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு வந்த எங்கள் தளபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி எனக்கு தெரியாது என்று சொன்னாய்.அதை இன்று நாங்கள் நம்புகிறோம்.இது சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை இப்போது உணர்கிறோம்.

நாங்கள் உன்னை எதிரியாக நினைத்து களத்தில் விளையாடினோம்.

உன்னோடு இருந்தவர்கள் உன்னோடு நட்பு பாராட்டுவது போல் நடித்து உன் உயிரோடு விளையாடிவிட்டனர்.

எம்ஜிஆர் இன்றும் எங்களுக்கு வாழ்நாள் எதிரிதான்.
ஆனால் உன் அகால மரணம் என்னை கலங்கடித்து விட்டது.

நீ தான் சர்வாதிகாரி என்று நினைத்து இருந்தேன்.ஆனால் இன்று ஆட்சிக்கு வரத்துடிக்கின்ற ஒரு கூட்டம் தான் உன்னை மிரட்டி இயக்கியது என்பதை அறிந்து உன் மீது பாவம் தான் தோன்றியது

மிக விரைவில் எங்கள் தளபதி உன் கூட இருந்து குழி பறித்தவர்களுக்கு நல்ல பாடம் நடத்துவார்.அந்த நல்ல செய்தியோடு உன் கல்லறைக்கு வந்து ஒரு நிமிடம் அஞ்சலி செய்வேன்.

By,

என்றும் திமுகவுக்காக மட்டும் உழைக்கும்
மனச்சாட்சியுள்ள தி.மு.க தொண்டன்.

-ஜெயராமன் திமுக

Add Comment