குழந்தயின்மையிலிருந்து விடுப்புக்கு ஆலோசனை

குழந்தயின்மையிலிருந்து விடுப்புக்கு ஆலோசனை பயனாளி தம்பதிகளின் அனுபவ கருத்து பகிர்வுக்கு

11 ஆண்டுகளாக குழந்தையின்றி பல விமர்சனங்களுக்கும், பேச்சுகளுக்கும் ஆளாகி,
10 ஆண்டுகளுக்கும் மேலாக பல மருத்துவர்களை நாடியும், மருத்துவம் செய்தும் பலனின்றி… கிட்டத்தட்ட வாழ்க்கையை வெறுத்த அந்த தம்பதி
இறுதி முயற்சியாக கோவையில் உள்ள
ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர்.

மராட்டியோ அல்லது குஜராத்தியோ… அம்மருத்துவர் சொன்ன அறிவுரைகளின்
படி மாதவிடாய் வந்த இரண்டாம்நாள் மருத்துவரைக் காண செல்ல வேண்டும்.

அந்த நாளும் வந்தது. நாளை காலை 7 மணிக்கு கோவைக் கிளம்பும் புகைவண்டிக்கு கிளம்ப வேண்டும் என்று… இருவருக்கும் வேண்டிய துணிகளை எடுத்துவைத்துவிட்டு அலாரத்தை 6 மணிக்கு வைத்துவிட்டு நடிநிசியில் தூங்கச் சென்றனர்.

அதிகாலை 4 மணிக்கு கண்விழித்த கணவன் நேரம் இருக்கு என்று மீண்டும் தூங்க… அலாரம் அடிக்காமல் போக திடீரென கண்விழித்த மனைவி அவசர அவசரமாக… “என்னங்க மணி 6:20 என்றாள்”.

சரேலென எழுந்து காலைக் கடன்கழித்து குளித்து ஆட்டோவில் ஏறி புகைவண்டி நிலையத்தை அடைந்து 3 வது நடைமேடையில் நின்றுகொண்டு இருந்த புகைவண்டியைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறே… நுழைவுச்சீட்டு வாங்க வரிசைக்கு சென்றான்.

அங்கிருந்த நபர்களிடம் விளக்கி நுழைவுச்சீட்டை வாங்க அதிகாரியிடம் கோவைக்கு 2 என்றதும்… அப்பெண்மணி இல்லை, வண்டி கிளம்பிடுச்சு… டிக்கெட் தர இயலாது என்றதும்… இல்லை இல்லை இதோ நிற்கின்றது என்று சொன்னதைக் காதில் வாங்காத பெண்மணியோ சிக்னல் கொடுத்தாச்சு.. ஆதலால் டிக்கெட் தரமாட்டேன் என்று உறுதியாய்க் கூற…

ஏமாற்றத்துடன் மனைவியை அழைத்துக்கொண்டு… படிகள் ஏறி இறங்கி வேகமாக ஓடி… கிளம்பி சென்று கொண்டு இருந்த வண்டியின் கடைசிப் பெட்டியில் மனைவியை ஏற்றிவிட்டு தானும் பெண்களுக்கான பெட்டியில் ஏறிக்கொண்டான்.

50 கிலோமீட்டருக்கு பின் வந்த மற்றுமொரு நிலையத்தில் இருவரும் இறங்கி அடுத்தப் பெட்டியில் ஏறும்போது அதனைப் பார்த்துக்கொண்டு இருந்த டிக்கெட் பரிசோதகர் நுழைவுச்சீட்டைக் கேட்டதும்… நடந்த நிகழ்வுகளை அட்சரசுத்தமாய் விளக்கியதும்… அடுத்த நிலையத்தில் நுழைவுச்சீட்டை வாங்கிவிடுங்கள் என்று சொன்னதை நன்றியுடன் இருவரும் பார்த்தனர்.

ஆசுவாசப்படுத்தி இருக்கைத் தேடி அமர்ந்து நிலையத்தில் வாங்கிய நொறுக்குத் தீனியை தின்றவாறு அப்பெண்…கணவனிடம் இதுதான் என் இறுதி முயற்சி. திரும்ப ஊருக்குச் செல்லும்போது குழந்தையுடன் தான் செல்வேன்…இல்லையெனில் உயிருடன் திரும்ப மாட்டேன் என்று பைத்தியம்போல் சொன்னதை… மறுத்த கணவன் இறைநம்பிக்கையுடன் வா… நல்லதே நடக்கும் என்று சமாதாணம் செய்தான்.

ஒருவழியாக கோவை சென்று மருத்துவரின் ஆலோசனைகளின்படி நடந்து… முறையாய் பின்பற்றி… சிகிச்சையை மேற்கொண்டு… அவர் சொன்ன நாளில் குருதிச் சோதனைசெய்ய சென்று… இடையில் பல பல ஆய்வுகள், மருந்துகள், பத்தியங்கள் என அனைத்தையும் ஒவ்வொன்றாய் பின்பற்றி .. குருதிச்சோதனை நாளில் இறைவனை வேண்டிக்கொண்டே… மகிழ்ச்சியாய்க் கடந்த தம்பதிகளையும், அழுகையுடன் திரும்பும் சிலரையும் பார்த்தவண்ணம் படபடப்புடன் தனக்கான அழைப்பு வந்ததும்…. திக் திக் இதயத்துடன் மருத்துவரை சந்தித்ததும்…

உங்கள் நம்பிக்கையும் இறைவனின் அருளும் உங்களை கைவிடவில்லை.
முதல் சோதனையில் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பான முடிவு வந்துள்ளது என்றதும் அத்தம்பதியினர் வானில் பறந்ததுபோல உணர்ந்தனர்.

மேலும் மருத்துவர்… இனிதான் மிக கவணத்துடன் இருக்கனும். உங்கள்
மனைவி மிகவும் பலகீனமாக இருப்பதாலும்… இரு குழந்தைகள் போல தெரிவதால் கருப்பைக்கு வேண்டிய பலம் தரவேண்டும் ஆதலால் படுக்கையை விட்டு எழக்கூடாது என்றும் ஆயிரத்தெட்டு ஆலோசனைகள் சொல்ல….

கோவையிலேயே வீடு எடுத்து தங்கி கிட்டத்தட்ட 8 மாதங்களில் பயபக்தியுடன் கட்டுப்பாடுகளுடன் இருந்தும்…
நீர்ச்சத்து குறைந்ததால்… உடன் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றதும் பதறி…. ஒருவழியாய்…

எட்டரை மாதத்தில் அழகழகாய் இரு குழந்தைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டும் இரண்டு கிலோக்களுக்கும் குறைவான எடையில்…
குட்டி கிட்டியாய்…
15 நாட்கள் இங்குபேட்டரில்…
பல இன்னல்களுக்கு பிறகு 12 வருடங்களுக்குப்பின் இதே நாளில் 17-11-2005
என்னை தந்தையாக்கி என் துணையைத் தாயாக்கி பெருமைத் தேடித்தந்த… மருத்துவமனையில் அனைவரும் குறிஞ்சிப்பூக்கள் என்று கொஞ்சிய… இரட்டையர்கள்
ஜாஃப்ரின் சுஹானா & முகமது ஜாஃபிர் சுஹைல் ஆகியோரின் 12 வது (11 முடிந்து) பிறந்தநாள் இன்று.

இறைவன் இருவருக்கும் நல்ல வாழ்வினைத் தர பிரார்த்தியுங்கள் உறவுகளே.

இன்ஷா அல்லாஹ் அடுத்த பிறந்தநாளை அவ்வைருவரும் குடும்பத்தினரோடு ஜெத்தாஹ் நகரில் சந்திக்கவும் பிரார்த்தியுங்கள் தோழமைகளே…

நிறைய நட்புகள் மருத்துவமனையின் முகவரி கேட்டுள்ளதால் இங்கே பதிகின்றேன்.

Hospital Address…
Dr. Asha Rao
Roa Hospital
120, West Perya Samy Road
DB Road.
R.S.Puram
Coimbatore.
Gandhipuram to Gandhi Park bus route near Vada kovai. Near Eye Foundation.

Add Comment