ஒரே நாடு ஒரே வரி” (GST) இதை மனப்பூர்வமாக ஏற்கிறேன்…!

“ஒரே நாடு ஒரே வரி” (GST) இதை மனப்பூர்வமாக ஏற்கிறேன்…!
————————————————————————-
அதற்கு முன்…

*இங்கே கதிராமங்களத்தில் உறுஞ்சும் வாயுவை கர்நாடகாவிலும் கொஞ்சம் உறுஞ்சுங்கள்.

*உபியில் விவசாயிகளுக்கு அளித்த மானியத்தை கொஞ்சம் தமிழக விவசாயிகளுக்கும் கொடுங்கள்.

*கூடங்குளம் கடற்கரையிலுள்ள அணுஉலைகளில் இரண்டை கோவா கடற்கரையில் அமையுங்கள் அல்லது கோவளம் கடற்கரையிலாவது அமையுங்கள்.

*குஜராத் மீனவர்களுக்கு கொடுத்துள்ள சுதந்திரத்தை தமிழக மீனவர்களுக்கும் கொடுங்கள்.

*நியூட்ரினோவுக்காக தேனி மலையை உடைப்பதை விடுத்து நாக்பூர் மலையை குடையுங்கள்.

*தாமிரபரணியை பெப்ஸி, கோக் நிறுவனங்களிடமிருந்து பிடுங்கி கங்கையை கொடுங்கள்.

*அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை சிவகாசி தொழிலாளர்களுக்கும் அளியுங்கள்.

 

ஒரே தேசம்
ஒரே வரி

ஆனால் நீதி மட்டும்

பணக்காரனுக்கு தனி
ஏழைகளுக்கு தனி

Add Comment