கடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு!

கடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு!
கடையநல்லூர்: அக் 19 நெல்லை மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் பரவலை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கடையநல்லுர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அதிகாரிகளிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆய்வை மேற்கொன்டார்.

அதன் பின்னர் கடையநல்லூரில் நகராட்சி அலுவலகம், அம்மா உணவகம், வார சந்தை,அரசு மருந்துவமனை, ரகுமாணியாபுரம் 1 வது தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று வீடு வீடாக ஏறி தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகிறதா என ஆய்வு செய்தார் அப்போது பொது மக்கள் நகராட்சி பகுதிகளில் முறையாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டினர் மேலும் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நோய்யாளியிடம் குறைகளை கேட்டறிந்தார் அரசு மருத்துவர் அனிதாவிடம் தேவையான மருந்துகள் இருப்பு குறித்து கேட்டரிந்தார் மருத்துவமனை முழுவதும் பார்வையிட்டார் அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாவட்டம் முழுவதும் 2000 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பபட்டுள்ளது கடையநல்லூரி 5 சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் மாவட்டம் முழுவதும் நகராட்சி பகுதிகளில் தேவை இல்லாத பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள், அனைத்தையும் மாதத்தில் கடைசி 15 நாட்கள்மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாச்சியர், வட்டாட்சியர் , நகராட்சி ஆனையர் தலைமையில் அரசு ஊழியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடம் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து சுத்தம் செய்யப்படும் மேலும் தனியார் ஜேசிபி இயந்திரம் மூலம் பாப்பான்கால்வாய் , சீவலான்கால்வாய் தூர்வாரப்படும் டெங்கு காய்ச்சல் மாவட்டம் முழுவதும் குறைந்து வருகிறது என்றார்.

ஆய்வின் போது தென்காசி கோட்டாச்சியர் (பொ) தாசில்தார் மாரியப்பன் ,நகராட்சி பொறியாளர் கிறிஸ்டோபர் ராஜன் அரசு மருத்துவர்  அனிதா,  மாவட்ட பூச்சியல் துறை வல்லுனர் குருநாதன் , கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் ராஜ்குமார், மதுசூதனன் ,சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சமீம்ஆயிஷா நகர்புற அலுவலர் டாக்டர் ரவி சுகாதார ஆய்வாளர்கள் சேகர், சக்திவேல், கண்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.

செய்தி படம் குறிச்சி சுலைமான்.

Add Comment