கடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:

கடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:
********************************

கடையநல்லூர் கல்விச் சிறகுகள் ( kadayanallur Educational Wings) என்ற அறக்கட்டளை நல்லூரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து ,அவர்களது உயர்கல்விக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று வழிநடத்தி வருகிறது…..

இதற்கான நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில் நேரடியாக பல நன்கொடையாளர்களின் உதவியை ஒருபுறம் நாடி வருவதோடு,நல்லூர் நகரில் அமைந்த சில முக்கிய வியாபாரக் கடைகளில் கண்ணாடி உண்டியல்களை நிறுவி வருகிறோம்…

நெல்லை தாபா,அக்ஸா ட்ராவல்ஸ்,வசந்தம் சூப்பர் மார்க்கெட்,அமுதம் ஹோட்டல்,KCC ,ரைசான் மொபைல்ஸ், சன் பேக்கரி, க்ரீன்ஸ் சூப்பர்மார்கெட்,போன்ற இடங்களில் கடந்த ஓராண்டில் இதற்கான அனுமதி பெறப்பட்டு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது…

இதன் தொடர்ச்சியாக இந்த கண்ணாடி உண்டியல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் சில கடைகளில் நிறுவ திட்டமிட்டுள்ளது அறக்கட்டளை நிர்வாகம்…

இந்த பதிவை படிக்கும் நபர்களில் வியாபாரக் கடை,உணவகம்,ட்ராவல்ஸ்,மெடிக்கல் போன்றவை நடத்தும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் இந்த கண்ணாடி உண்டியல்களை வைத்திட அனுமதி கோருகிறோம்…

உங்களது இந்த உதவியில் சேரும் சில நூறு ரூபாய் யாரோ ஒருவரின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யலாம்…

முறையான கணக்குகள் , வசூலான தொகை குறித்த தகவல்களை கடையின் உரிமையாளர் தாராளமாக பெற்றுக் கொள்ளலாம்…

இந்த சீரிய முயற்சியில் உங்களது உதவியையும் எதிர்பார்க்கிறோம்…

– அறக்கட்டளை நிர்வாகக் குழு
(கடையநல்லூர் கல்விச் சிறகுகள்)

Add Comment