கடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

கடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது

கடையநல்லூரில் ஜாய் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மற்றும் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மணிக்கூண்டு அருகே நடைபெற்றது இப் பேரணிக்கு ஜாய் மெட்ரிக் மேல்நிலைபள்ளி தாளாளர் சாலமோன் தலைதாங்கினார் சமுகநல இயக்கம் சீனாமசூது, மாஸ் ஹாஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தாருஸ்ஸலாம் மேல்நிலைபள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜபருல்லாஹ்ஷாரு வாழ்துரை வழங்கினார் சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்
பேரணி நகரில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அனைத்து தெருக்களிலும் பிளாஸ்டிக் உபயோகம் செய்யும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவியர்கள் தலைமை ஆசிரியர்கள் புஷ்பராஜ், ஆன்டனி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மாணவ மாணவியர்களு அறிவுரை வழங்கினார்.

Add Comment