தண்ணீரின் கண்ணீர் ! (பி. எம். கமால், கடையநல்லூர் )

தண்ணீரின் கண்ணீர் ! (பி. எம். கமால், கடையநல்லூர் ) தண்ணீர் நான் அழுகின்றேன் ! என் கண்ணீரை யாரறிவார் ? என் மழைத்துளி நாணயத்தை ஏரி குள உண்டியலில் சேமிக்கத் தெரியாத சிறுமனம் படைத்தோரே ! ஏரிகளும் குளங்களும் என்தாய்…

மூஃமீன்களே ! முஸ்லிம்களே ! (பி. எம். கமால் , கடையநல்லூர் ) மூஃமீன்களே ! முஸ்லிம்களே ! உங்கள் ஆமீன்களின் அணிவகுப்பால் பத்ரு சஹாபாக்களாய் மாறுங்கள் ! ஏந்துகின்ற கரங்களை வெறுங் கரங்களாக்க வெட்கப் படுகிறான் இறைவன் ! இந்தப்…

போதும் ! தோழனே! போதும்! பி. எம். கமால் (கடையநல்லூர்) போதும் தோழனே ! போதும் ! நீ இயக்கங்கள் பல கண்டு இஸ்லாத்தை வளர்த்தது போதும் ! கொடிகள் பல தூக்கிக் கோடிகள் சேர்த்ததும் போதும் ! வெற்றுக் கோஷங்களால்…

வருக ! ரமழானே ! வருக ! (பீ. எம். கமால், கடையநல்லூர்)   பசியைப் பகிர்ந்தளித்துப் பட்டினியை உணரவைக்கும் பத்திய மாதமே ! பத்திரமாக வா ! வா !   உன்னை வரவேற்க இதயத்துக் கரங்களை ஏந்துகிறோம் வா !   கலவைக் கொள்கைகளை சலவை செய்து ஈமான் கொடியில் காயப் போட ரமழானே வா !   எங்கள் ஈமான் துருப்பிடித்துக் கிடக்கிறது ! சுட்டெரித்து அதனைச் சுடரச் செய்ய வா வா !   பசித்தீயில் ஆன்மாவைப் புடம்போடப் போகின்றோம் ! பரமனையே நினைந்துருகிப் பசியாறப் போகின்றோம் ! எங்கள் பந்திக்கு இலை விரிக்க பாய்ந்தோடி வா !…

அருள் வேட்டல் ! (பி. எம். கமால், கடையநல்லூர்) உப்புதண் ணீரில்தன் உருவம் இழப்பதுபோல் உன்னில்நான் கரைய வேண்டும் ! ஒப்புமை இல்லாத உன்திருப் பெயரையே உச்சரித் தழிய வேண்டும் ! எப்புற மும்சூளும் ஏகனே! உன்னருள் எனைச்சூழ அருள் வேண்டும்…

16-02-2014 அன்று நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிஞர் சீனி நயினார் முஹம்மது (மலேசியா ) அவர்களின் தலைமையில் மன்பாடும் நாயகத்தின் பண்பாடு என்ற பொதுத் தலைப்பில் மதீனா என்ற உப தலைப்பில் பாடிய கவியரங்கக் கவிதை P.…

பூமியில் வந்தது புதியதோர் வசந்தம் ! (பி. எம். கமால், கடையநல்லூர்) வானில் விண்மீன் பூக்கள் தூவிட வட்ட நிலாவும் கட்டழ கிழந்திட வெட்டைப் பாலையில் விரிநிழல் மரம்வர வந்தது இந்தப் பூமியில் வசந்தம் ! நாளிகைதோறும் மூலிகை மரங்கள் நடுவதற்…

காவியுடன் கூட்டுக் காணவே வேண்டாம் ! கலைஞரே ! ஆவியுடன் கூட்டு அமைத்தாலும் ஒருபோதும் காவியுடன் கூட்டுக் காணவே வேண்டாம் ! இஸ்லாமிய மந்தை இனியும் உங்களுடன் தொடர்ந்து வர வேண்டுமென்றும் தோள் கொடுக்க வேண்டுமென்றும் எண்ணினால் நீங்கள் தாமரைப் பூவெடுத்து…

கண்ணீர் அழுக்கு கழுவப்படாது ! (பி. எம். கமால், கடையநல்லூர்) சுதந்திர நாட்டுக்குச் சொந்தம் கொண்டாடும் காங்கிரசுக் கட்சியின் கனதனவான்களே ! அந்தப் போரில் சிந்தியது எங்கள் சிவப்பு ரத்தமும்தான் ! அது நீங்கள் வெற்றிலை போட்டுத் துப்பிய சாறல்ல !…